Monday, June 22
Shadow

ஃபயர் இளம் ரசிகர்களை மிகவும் கவரும்.

தயாரிப்பாளரும், நடிகருமான JSK இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ஃபயர் இந்த திரைப்படத்தில் பாலாஜி முருகதாஸ் ,சாந்தினி தமிழரசன், ஷாக்சி அகர்வால், ரக்சிதா மஹாலக்ஷ்மி ,காயத்ரி ஷான் JSK , சிங்கம்புலி ,சுரேஷ் சக்கரவர்த்தி, மற்றும் பலர் நடித்துள்ளார்கள்.

பயர் படத்தின் கதையின்நாயகனாக காசி என்னும் கதாபாத்திரத்தில் பாலாஜி முருகதாஸ் நடித்துள்ளார்.மருத்துவராக நடித்துள்ள இவர், இந்தப் படத்தில் பல இளம் பெண்களை காதல் வலையில் சூழ்ச்சியாக வீழ வைத்து ,பின்பு அவர்களை வஞ்சித்து ஏமாற்றும் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ,ஏற்கனவே சின்னத்திரை ரசிகர்களிடையே மிகவும் பிரபலமாக இருக்கும் இவர் தனக்கு வெள்ளித்திரையில் கிடைத்த வாய்ப்பை சரியான முறையில் பயன்படுத்தி கொள்ளும் வகையில். தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்திற்கு ஏற்ப சிறப்பான நடிப்பை கொடுத்து நடித்துள்ளார், இந்த படம் இவருக்கு தொடர்ந்து பல வெள்ளித்திரை பட வாய்ப்புகளை பெற்றுத் தரும் .

மேலும் இந்த படத்தில் சாந்தினி தமிழரசன், ரச்சிதா மகாலட்சுமி, சாக்ஷி அகர்வால், காயத்ரி ஷான் என பலரும் தத்தம் கதாபாத்திரங்களில் குறைவில்லா நடிப்பை நிறைவாக கொடுத்து நடித்துள்ளார்கள். படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் தயாரிப்பாளர் ஜே எஸ் கே சதீஷ் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார். தன்னுடைய கதாபாத்திரத்திற்கு ஏற்ற உடல் மொழியும் தோற்றமும் இவரை கதாபாத்திரத்திற்கு முற்றிலும் பொருந்துமாறு அமைத்துள்ளது. மேலும் சுரேஷ் சக்கரவர்த்தி., சிங்கம்புலி போன்றவர்களும் குறிப்பிட்ட கதாபாத்திரங்களில் நன்கு நடித்துள்ளார்கள்.

உண்மை கதையினை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள கதைக்களத்திற்கு ,பொருத்தமான நடிகர்களை நடிக்க வைத்து, விறுவிறுப்பான திரைக்கதையுடன் திரில்லர் படமாக JSK இப்படத்தை உருவாக்கியுள்ளார் .அவருடைய கதை களத்திற்கு இணக்கமான ஒளிப்பதிவை சதீஷும் ,விறுவிறுப்பான காட்சிகளை அமைக்க படத்தொகுப்பாளர் பிரேம்குமாரும் பக்க துணையாக இருந்துள்ளார்கள். டி கேயி ன் இசையில் இளைஞர்களை ஈர்க்கும் பாடல்களும், பின்னணி இசையும் நன்கு அமைக்கப்பட்டுள்ளது.

காதலர் தினத்தன்று வெளியாகும் இந்த ஃபயர் இளம் ரசிகர்களை மிகவும் கவரும்.

Related posts:

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் முன்னோடி கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களின் 116 வது பிறந்தநாளை முன்னிட்டு

சிவகார்த்திகேயன் வழங்கும், “ஹவுஸ் மேட்ஸ்” படத்தை, தமிழகமெங்கும் AGS Cinemas நிறுவனம் வெளியிடுகிறது ! 

Dawn Pictures தயாரிப்பில் ஆகாஷ் பாஸ்கரன் இயக்கும் “இதயம் முரளி” பட டைட்டில் மற்றும் டீசர் வெளியீட்டு விழா!!

2K லவ்ஸ்டோரி" டிரெய்லர் வெளியீட்டு விழா !!

சேலம் மாநகர மேயர் வெளியிட்ட 'கள்ள நோட்டு' திரைப்படத்தின் டீசர்!

நடிகர் அஜித்குமாரின் ’விடாமுயற்சி’ படத்தில் இருந்து கணேஷ் & தஸ்ரதி கதாபாத்திரங்களுக்கான அறிமுக போஸ்டர் வெளியாகியுள்ளது!*

Character Intro #FamilyPadam

CYNTHIA PRODUCTION தயாரிப்பில் இசை ஞானி இளையராஜா பாடல்களை எழுதி இசையமைக்க ஸ்ரீகாந்த் -