Thursday, September 10
Shadow

எனக்கு இப்படி இருப்பதுதான் மகிழ்ச்சி… திருமணம் குறித்து வெளிப்படையாக பேசிய ஓவியா…!!!

கடந்த 2010ஆம் ஆண்டு விமல் நடிப்பில் வெளியான களவாணி படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் தான் நடிகை ஓவியா. அதன் பின்னர் தொடர்ந்து பல படங்களில் நடித்தார். ஒரு கட்டத்தில் வாய்ப்பு குறைந்ததால் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

 

பிக்பாஸ் முதல் சீசனில் பங்கேற்ற ஓவியா அவருக்கு கிடைத்த வாய்ப்பை மிகச் சரியாக பயன்படுத்திக் கொண்டார். இவருக்கென ரசிகர்கள் ஓவியா ஆர்மி தொடங்கும் அளவிற்கு ஏராளமான ரசிகர்களை கைவசம் வைத்திருந்தார்.

 

அதன் மூலம் கிடைத்த பிரபலம் காரணமாக வெளியே வந்த ஓவியா சில படங்களில் நடித்தார். அதன் பின்னர் காணாமல் போய்விட்டார். இந்நிலையில் சமீபத்தில் திருமணம் குறித்து பேட்டி ஒன்றில் ஓவியா வெளிப்படையாக பேசியுள்ளார்.

 

அதன்படி அவர் கூறியதாவது, “இப்போது நான் சிங்கிளாக இருக்கிறேன். இது மகிழ்ச்சியாக இருக்கிறது. என்னுடைய மகிழ்ச்சிக்கு இன்னொருவர் தேவை என நான் நினைப்பதில்லை. திருமணம் என்பது அதற்கான நேரத்தில் அமையும்.

நாம் அதன் பின்னால் போகக்கூடாது. அதுவாக வந்தால் ஓகே, இல்லை என்றாலும் பரவாயில்லை. நான் மகிழ்ச்சியாகத்தான் இருப்பேன். யாரிடமும் எதையும் எதிர்பார்ப்பதில்லை. நான் தனியாக இருப்பதையே விரும்புகிறேன்” என கூறியுள்ளார்.

முன்னதாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் சக போட்டியாளரான ஆரவ் உடன் காதலில் இருந்த ஓவியாவிற்கு அந்த காதல் நீண்ட நாள் நீடிக்கவில்லை. தற்போது 32 வயதாகும் நிலையில் ஓவியா திருமணம் குறித்து இப்படி பேசி இருப்பது அவர் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 

Related posts:

மெட்ரோ' சத்யா நாயகனாக நடிக்கும் 'ராபர்' படத்தின் டிரெய்லரை வெளியிட்ட மக்கள் செல்வன் விஜய் சேதுபதி..

ஆர்எம்பி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பாளர் வி.ஜி. தனலட்சுமி கோபாலன் வழங்கும், அறிமுக இயக்குநர் பிரேம் நசீர் இயக்கத்தில் பிக் பாஸ...

பிரபல நடன இயக்குநர் கலைமாமணி ஸ்ரீதர் மாஸ்டரின் ஏ ஆர் எஸ் டான்ஸ்

ரூ. 304 கோடி வசூல் செய்து பட்டையை கிளப்பிய ஜூனியர் என்டிஆரின் தேவரா படம்

நடிகர்கள் காளிதாஸ் ஜெயராம், மஹத் ராகவேந்திரா மற்றும் பல முக்கிய அரசியல்வாதிகள் CTMA- ன் ஆவணிப்பூவரங்கு 2024 நிகழ்வில் கல...

இந்த சீசனில் ஒவ்வொரு கனவிற்கும் ஒரு கதவு திறக்கிறது: ஆகஸ்ட் 16 முதல் ஜியோஹாட்ஸ்டார் மற்றும் ஸ்டார் விஜயில் ‘Common Man’-...

Vfx கத்துக்கணுமா எங்க கிட்ட வாங்க என்ற அளவிற்கு

சிம்ரன் தனது 28 ஆண்டுகளைக் கொண்டாடுகிறார் ('The Last One') movie