Monday, June 15
Shadow

இராயப்பேட்டை அரசு மருத்துவமனையுடன் இணைந்து வசந்த பவன் நடத்திய இரத்த தான முகாம்!

இராயப்பேட்டை அரசு மருத்துவமனையுடன் இணைந்து வசந்த பவன் நடத்திய இரத்த தான முகாம்!

இராயப்பேட்டை அரசு மருத்துவமனை, இரத்ததான வங்கியுடன் இணைந்து தொடர்ச்சியாக மூன்றாவது வருடம் இரத்த தானம் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருக்கிறது சென்னை, நம்ம வீடு வசந்த பவன். வசந்த பவன் ஊழியர்களோடு நடக்கும் இந்த ப்ளட் டொனேஷன் கேம்ப்பில் கடந்த இரண்டு வருடங்கள் 50-60 பேர் மட்டுமே இரத்த தானம் செய்திருக்கின்றனர். ஆனால், இந்த வருடம் 200 பேர் இரத்த தானம் செய்திருக்கின்றனர் என்ற விஷயம் குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்வை தலைமை தாங்கி தொடங்கி வைத்தது வசந்த பவன் உரிமையாளர் ரவி அவர்களின் மனைவி சொர்ணலதா.

இதுபற்றி சொர்ணலதா பேசுகையில், “இரத்த தானம் நிகழ்ச்சியை தொடர்ந்து மூன்றாவது வருடம் இராயப்பேட்டை அரசு மருத்துவமனையுடன் இணைந்து செய்து வருவது மகிழ்ச்சி. அரசு மருத்துவமனையில் இந்த நிகழ்வை நடத்தும்போது அதிக மக்களிடம் இது சென்றடைந்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்பதே நோக்கமாகும். சென்னையில் உள்ள எங்கள் ஊழியர்கள் விருப்பப்பட்டு இரத்த தானம் செய்து வருகிறார்கள். இந்த வருடம் 200 பேர் வந்திருக்கிறார்கள். அடுத்த வருடம் இந்த எண்ணிக்கை அதிகமாக வேண்டும் என்பதுதான் விருப்பம்” என்றார்.

Related posts:

டீன்ஸ் நன்றி அறிவிப்பு விழாவில் குழந்தைகளுக்கு பார்த்திபன் அன்பு முத்தமழை*

சசிகுமாரின் 'நந்தன்' படத்தை பாராட்டிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!*

வணங்கான்’ படப்பிடிப்பு ஒரு மாஸ்டர் கிளாஸ் போல இருந்தது” ; நாயகி ரோஷினி பிரகாஷ் பிரமிப்பு*

எந்த மொழியை இங்கு திணித்தாலும், தமிழை அழிக்க முடியாது, கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல் இசை வெளியீட்டு

அமைச்சர் மா. சுப்ரமணியன் திறந்து வைத்தார்

ஆகோள் மூன்றாம் பாகம் 2026ஆம் ஆண்டு வெளியாகும்*

கல்பாத்தி எஸ். அகோரமின் ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் பிரம்மாண்ட தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய் இரு மாறுப...

ஹிப்பை பார்த்து லிப்பை கோட்டை விட்ட கதாநாயகன் : இயக்குநர் பேரரசு ஜாலி பேச்சு!