Monday, June 8
Shadow

பிரபல திரைப்பட தயாரிப்பு நிறுவனமான பி.டி.ஜி யூனிவர்சல் ‘டிமாண்டி காலனி 2’, ‘சென்னை சிட்டி கேங்கஸ்டர்ஸ்’, ‘

பிரபல திரைப்பட தயாரிப்பு நிறுவனமான பி.டி.ஜி யூனிவர்சல் ‘டிமாண்டி காலனி 2’, ‘சென்னை சிட்டி கேங்கஸ்டர்ஸ்’, ‘ரெட்ட தல’ ஆகிய திரைப்படங்களை தயாரித்துள்ளது. பி.டி.ஜி யூனிவர்சலின் நிறுவனத் தலைவராக திரு. பாபி பாலசந்திரன் மற்றும் டாக்டர். மனோஜ் பெனோ இந்நிறுவனத்தின் ஹெட் ஆஃப் ஸ்ட்ரடஜியாகவும் பொறுப்பு வகிக்கிறார்கள். திரு. பாபி அவர்கள் படம் தயாரிப்பது மட்டுமல்லாமல், கோவையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் பி.டி.ஜி அறக்கட்டளை என்ற தொண்டு நிறுவனத்தை கடந்த 8 ஆண்டுகளாக திறன்பட நடத்தி வருகிறார். இந்நிறுவனம் பெண்கள் முன்னேற்றம், கல்வி மற்றும் கிராமப்புற வளர்ச்சியைக் குறிக்கோளாக கொண்டு கடந்த 8 வருடங்களாக செயல்பட்டு வருகிறது. தற்போது இதன் மூலம் திரைத்துறையில் பணிபுரியும் விளிம்புநிலை ஊழியர்களுக்கு பி.டி.ஜி அறக்கட்டளை மூலம் மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

இதன் மூலம் இன்று 09.02.2025 பி.டி.ஜி அறக்கட்டளை மற்றும் பி.டி.ஜி யூனிவர்சல் இணைந்து திரைத்துறையில் பணிப்புரியும் 277 தென்னிந்திய திரைப்பட மற்றும் சின்னத்திரை மகளிர் சங்க ஊழியர்களுக்கு அவர்களின் பணிநேரங்களில் பயன்படும் வகையில் அனைவருக்கும் ரெயின்கோட் வழங்கும் நிகழ்ச்சி சாலிகிராமத்தில் உள்ள மகளிர் ஊழியர்கள் சங்கம் கட்டிடத்தில் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத் தலைவர் திரு ஆர்.கே.செல்வமணி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. திரைத்துறை பணியாளர்களுக்கு அவர்களின் பணியில் புத்துணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தோடு இந்நிகழ்வு நடைபெற்றது.

 

Related posts:

நேச்சுரல் ஸ்டார்' நானி - சைலேஷ் கோலானு - வால் போஸ்டர் சினிமா - யுனானிமஸ்

அது வாங்குனா இது இலவசம்’ படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை வெளியிட்ட நடிகை நமீதா*

துல்கர் சல்மான், வெங்கி அட்லூரி மற்றும் சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸின் ’லக்கி பாஸ்கர்’ திரைப்படம் 31 அக்டோபர் 2024 அன்ற...

Character Intro #FamilyPadam

விஜய் தேவாரகொண்டாவின் 'VD12' படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு*

ரெட் ஃப்ளவர்' படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கியது...*

அமரன்… வலுவான கதையாலும் மனதில் பதியும் சித்தரிப்புகளாலும் திரையரங்குகளில் 25

நடிகர்கள் காளிதாஸ் ஜெயராம், மஹத் ராகவேந்திரா மற்றும் பல முக்கிய அரசியல்வாதிகள் CTMA- ன் ஆவணிப்பூவரங்கு 2024 நிகழ்வில் கல...