Saturday, June 13
Shadow

மெசஞ்சர் திரை விமர்சனம்

மெசஞ்சர் திரை விமர்சனம்

மெஸஞ்சர்.. இந்த படத்தோட கதை என்னன்னா?.. ஐடி ஊழியரான ஸ்ரீராம் கார்த்திக்கோட காதலி வேற ஒருத்தர கல்யாணம் பண்ணிக்கிறாங்க.. இதுனால தன்னோட வீட்ல தூக்குப் போட்டு தற்கொலை செஞ்சுக்க முயற்சி செய்யுற ஹீரோவுக்கு பேஸ்புக் மெசஞ்சர் மூலமா அவரோட பேஸ்புக் பிரண்ட் கிட்ட இருந்து ஒரு மெசேஜ் வருது..ஆனா நான் ஏற்கனவே இறந்துவிட்டேன்.. உங்கள ரொம்ப பிடிக்கும் அப்படின்னு மெசேஜ்ல அந்த பொண்ணு சொல்ல நாயகனுக்கு ஷாக்.. நாயகியோட ஊரில் சென்று விசாரிக்கும் நாயகனுக்கு அவர் இறந்துவிட்டார் என்பது உறுதியாகுது.. இதனை அடுத்து செத்துப்போன நாயகி மீது நாயகனுக்கும் காதல் வருது.. திருமணமும் செஞ்சுக்கிறாரு.. அதுக்கு அப்புறம் என்ன ஆச்சு அப்படிங்கறதுதான் கதை..

தமிழ் சினிமால எத்தனையோ காதல் கதைகள் வந்திருந்தாலுமே இந்த கதை சற்று வித்தியாசமாக தான் இருக்குன்னே சொல்லலாம்.. ஆனா இது எல்லாம் உண்மையில நடக்குமா அப்படிங்கற கேள்வியும் எழுது.. ஹீரோ ஸ்ரீராம் கார்த்திக் தன்னோட முழுமையான நடிப்ப கொடுத்திருக்காரு.. நாயகி இறந்து போயிருந்தாலும் அவரோட உண்மையான காதலை பார்த்து அவர் மீது இவரும் காதல் வயப்படுறாரு..

நாயகியா நடிச்சிருக்கற பாத்திமா நஹும் நல்ல நடிப்பை கொடுத்திருக்காங்க.. காதல் காட்சிகள்ல ரசிக்க வைக்கிறாங்க.. தோழியா வர்ற வைசாலி, முன்னாள் காதலி மனிஷா ஜாஸ்னானி ஆகியோர் நடிப்பும் ஓகே.. லிவிங்ஸ்டன், ஜீவா ரவி, ஹீரோவோட அம்மா உள்ளிட்டவங்க நடிப்பும் நல்லா இருக்கு.. பாலகணேஷனோட ஒளிப்பதிவும் அபுபக்கரோட இசையும் படத்துக்கு தேவையானத செஞ்சிருக்கு.. நடைமுறையில சாத்தியமில்லாத ஒரு கதையை எடுத்துக்கிட்ட இயக்குனர் அதை முடிந்த வரை ஏற்றுக்கொள்ளும் வகையில சொல்ல முயற்சி செஞ்சிருக்காரு.. ஆனாலுமே படம் பாக்குற ஆடியன்ஸ் இதை ஏத்துப்பாங்களா அப்படிங்கறது சந்தேகம்தான்.. மொத்தத்துல நம்பமுடியாத கதையை ஏதோ ஒரு நம்பிக்கையில எடுத்து பார்வையாளர்கள நம்ப வைக்க முயற்சி செஞ்சிருக்காரு இயக்குனர்..

Related posts:

தமிழ் மக்கள் கொடுத்த மணிமகுடத்தை என்றும் அவரிடமே வைத்திருக்கும் வேட்டையன் ரஜினி அவர்களுக்கு என்றும் அன்புடன் OTP CINEMa...

வீடு திரும்பும் போது ஒருவர் நட்பு ரீதியாக கேளிக்கு ஆளாக்கப்படுகிறார் பிறகு இவர்கள் பிரிந்து பெரியவர்கள் ஆகிறார்கள்

கடைசியில், "நிறம் மாறும் உலகில்" படம் ஒரு தாயின் பாசத்தின் மூலம் புனிதமான தொடர்புகளை அழகாக காட்சிப்படுத்துகிறது,

ஒன்ஸ் அபான் ஏ டைம் இன் மெட்ராஸ் - திரைவிமர்சனம்

ஜூராசிக் வேர்ல்ட்: ரீ பெர்த் திரைவிமர்சனம்

தொடரும் - திரைபடவிமர்சனம்

வாரிசு படத்திற்கு ரேட்டிங் சொன்ன நபர்….. படம் இப்படித்தான் இருக்கும்….. வெளியான முதல் விமர்சனம்?….!!!!

நேஷனல் அவார்ட் பட்டியலில் மெய்யழகன் திரைப்படம் சேர்க்கப்படும் என்பதே தற்போதைய ஹாட் டாபிக்