
கடந்த 2010ஆம் ஆண்டு விமல் நடிப்பில் வெளியான களவாணி படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் தான் நடிகை ஓவியா. அதன் பின்னர் தொடர்ந்து பல படங்களில் நடித்தார். ஒரு கட்டத்தில் வாய்ப்பு குறைந்ததால் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
பிக்பாஸ் முதல் சீசனில் பங்கேற்ற ஓவியா அவருக்கு கிடைத்த வாய்ப்பை மிகச் சரியாக பயன்படுத்திக் கொண்டார். இவருக்கென ரசிகர்கள் ஓவியா ஆர்மி தொடங்கும் அளவிற்கு ஏராளமான ரசிகர்களை கைவசம் வைத்திருந்தார்.
அதன் மூலம் கிடைத்த பிரபலம் காரணமாக வெளியே வந்த ஓவியா சில படங்களில் நடித்தார். அதன் பின்னர் காணாமல் போய்விட்டார். இந்நிலையில் சமீபத்தில் திருமணம் குறித்து பேட்டி ஒன்றில் ஓவியா வெளிப்படையாக பேசியுள்ளார்.
அதன்படி அவர் கூறியதாவது, “இப்போது நான் சிங்கிளாக இருக்கிறேன். இது மகிழ்ச்சியாக இருக்கிறது. என்னுடைய மகிழ்ச்சிக்கு இன்னொருவர் தேவை என நான் நினைப்பதில்லை. திருமணம் என்பது அதற்கான நேரத்தில் அமையும்.
நாம் அதன் பின்னால் போகக்கூடாது. அதுவாக வந்தால் ஓகே, இல்லை என்றாலும் பரவாயில்லை. நான் மகிழ்ச்சியாகத்தான் இருப்பேன். யாரிடமும் எதையும் எதிர்பார்ப்பதில்லை. நான் தனியாக இருப்பதையே விரும்புகிறேன்” என கூறியுள்ளார்.
முன்னதாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் சக போட்டியாளரான ஆரவ் உடன் காதலில் இருந்த ஓவியாவிற்கு அந்த காதல் நீண்ட நாள் நீடிக்கவில்லை. தற்போது 32 வயதாகும் நிலையில் ஓவியா திருமணம் குறித்து இப்படி பேசி இருப்பது அவர் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.