
கடுக்கா திரைவிமர்சனம்
நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழ் சினிமாவில் ஒரு நல்ல நகைச்சுவை படம் என்று தான் சொல்ல வேண்டும் நம்மை 1980 க்கு இழுத்துச் சென்ற ஒரு உணர்வை இந்த படம் கொடுக்கிறது ஏன் பாக்யராஜ் அவர்களின் நேற்று இன்று நாளை இது போன்ற படங்களை நம் நினைவுக்கு கொண்டு வந்தது என்று கூட சொல்லலாம் அந்த அளவுக்கு ஒரு சிறப்பான படம் தான் இந்த படம் மிகக் குறைந்த பட்ஜெட்டில் ஒரு தரமான படத்தை கொடுக்க முடியும் என்பதற்கு சான்று இந்த படம்.
விஜய் கவுரிஷ், ஸ்மேஹா, ஆதர்ஷ் மதிகாந்த், மஞ்சுநாதன், மணிமேகலை, சுதா
இயக்கம் : எஸ்.எஸ். முருகராசு
இசை : கேவின் டிகாஸ்ட்
‘கடுக்கா’ – காதல் தொல்லையை நகைச்சுவையோடு சொல்லும் எதார்த்தக் கதை
வேலைக்குச் செல்லாமல், அம்மாவின் உழைப்பில் வாழும் நாயகன் விஜய் கெளரிஷ், வீட்டுக்கு எதிரே குடியேறும் ஸ்மேஹாவை பார்த்ததும் காதல் கொள்ள, அவரை தொடர்ந்து காதல் தொல்லை கொடுக்கிறார். அதே சமயம், நண்பர் ஆதர்ஷும் ஸ்மேஹாவை திருமணம் செய்ய விரும்புவதாகச் சொல்வது கதைக்கு சுவாரஸ்யத்தை தருகிறது.
விஜய் கெளரிஷின் காதலை ஏற்றுக்கொள்ளும் போல் நடக்கும் ஸ்மேஹா, மறுபுறம் ஆதர்ஷையும் காதலிப்பதாகச் சொல்கிறார். உண்மை வெளிப்படும் தருணத்தில், இருவரையும் குழப்பி, காதல் மயக்கத்தில் சிக்கவைக்கும் விதத்தில் அவள் நடக்கும் விதம், கதையை நகைச்சுவையுடன் நகர்த்துகிறது. ஆனால், அவர் ஏன் அப்படி செய்கிறார்? உண்மையில் காதலிக்கிறாரா? என்பதே படத்தின் முக்கியக் கேள்வி.
புதுமுகங்கள் என்றாலும், விஜய் கெளரிஷ், ஆதர்ஷ், ஸ்மேஹா ஆகியோர் தங்களது கதாபாத்திரங்களில் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். பேருந்து நிலையத்தில் நிற்கும் ஏக்கமிகு இளைஞனாக விஜய் கெளரிஷ் சிறப்பாக நடித்துள்ளார். பக்கத்து வீட்டு பெண் போல் எளிமையாக நடித்திருக்கும் ஸ்மேஹா, பெண்களின் மனக்குமுறல்களை பிரதிபலிக்கிறார். ஆதர்ஷ் உட்பட, மஞ்சுநாதன், மணிமேகலை, சுதா உள்ளிட்டோர் நடிப்பும் கதைக்கு பலம் சேர்க்கிறது.
கெவின் டி. கோஸ்டாவின் இசை, பின்னணி ஒலி சேர்ந்து படம் முழுவதும் மனதில் நிற்க வைக்கிறது. சதிஷ் குமார் துரைகண்ணுவின் ஒளிப்பதிவு, கிராமத்து வீடுகள், டீக்கடை, பேருந்து நிலையம் என அனைத்தையும் எதார்த்தமாகக் காட்டுகிறது. எடிட்டர் எம். ஜான்சன் நோயல், காட்சிகளை நேர்த்தியாக தொகுத்து நகைச்சுவை ரசிப்பை அதிகரித்துள்ளார்.
படத்தை எழுதி இயக்கிய எஸ்.எஸ். முருகரசு, இளைஞர்களின் வாழ்வியலை நகைச்சுவையாகச் சொல்வதோடு, பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனையை கூர்மையாக எடுத்துரைத்திருக்கிறார். இரண்டு இளைஞர்களின் காதல், இருவரின் காதலையும் ஏற்றுக்கொள்ளும் பெண்ணின் முடிவு – இறுதியில் “கடுக்கா” கொடுக்கும் விதமாக கதையை நகர்த்தி, பார்வையாளர்களை சிரிப்போடு சிந்திக்க வைக்கிறார்.
மொத்தத்தில்:
‘கடுக்கா’ – காதல் தொல்லையை நகைச்சுவையோடும், சமூக கருத்தோடும் சொல்லும் படம்.
ரேட்டிங் : ⭐⭐⭐⭐☆ (4/5)
