Saturday, April 18
Shadow

காந்தா திரைவிமர்சனம்

காந்தா… இந்த படத்தோட கதை என்னன்னா.. 1950கள்ல தமிழ் சினிமால உச்ச நட்சத்திரமா இருப்பவருதான் துல்கர் சல்மான்.. அவரு தன்ன உருவாக்குன இயக்குநர் சமுத்திரக்கனியோட கனவு கதையா உருவாகுற சாந்தா படத்துல இருந்து வெளியேறி மறுபடியும் அந்த படத்தை தொடங்க முடிவு செய்யறாரு.. அதன்படி, மீண்டும் அந்த படத்தோட படப்பிடிப்பு தொடங்குது… ஆனா இந்த தடவ கதை மற்றும் சீன்ஸ்ல துல்கர் சல்மான் நெறைய மாற்றங்கள செய்ய அது சமுத்திரக்கனிக்கு எரிச்சல கொடுக்குது.. ஆனாலும் தன்னோட கனவு கதை அப்படிங்கறதால படத்தை எப்படியாவது முடிக்கனும்ங்கிற கட்டாயத்துல இருக்குற இயக்குநர் சமுத்திரக்கனி, ஹீரோவோட எல்லா அடாவடியையும் பொறுத்துக்கறாரு.. அதுக்காக தான் அறிமுகப்படுத்துன நாயகி பாக்யஸ்ரீய வெச்சு ஒரு திட்டம் போடுறாரு.. சமுத்திரக்கனியோட திட்டம் பழிச்சுச்சா..இவங்க மோதல் எந்த மாதிரியான விளைவுகள ஏற்படுத்துது.. திட்டமிட்டபடி படத்த எடுத்து முடிச்சாங்களா அப்படிங்கறதுதான் காந்தா..

பிரபல நடிகருக்கும் அவரை உருவாக்குன இயக்குநருக்கும் இடையே ஏற்படுற ஈகோ பிரச்சனையை மையமா வெச்சு இந்த காந்தா படத்த எடுத்திருக்காங்க.. அது எந்த அளவுக்கு சுவாரஸ்யத்த கொடுத்திருக்குன்னு பாக்கலாம்..

நடிப்பு சக்ரவர்த்தியா துல்கர் சல்மான் அட்டகாசமான நடிப்ப கொடுத்திருக்காரு.. நடிப்பு சக்ரவர்த்தியாகவே திரையில வாழ்ந்திருக்காருன்னே சொல்லலாம்.. சீன் பை சீன் அவரோட நடிப்பு அசரடிச்சிருக்கு.. அவரோட லுக், ஹேர்ஸ்டைல், வசீகரமான முகம் என இந்த படத்துலயும் சிக்ஸர் அடிச்சிருக்காரு துல்கர் சல்மான்.. ஏமாற்றம், அவமானம் , ஏக்கம், காதல் என அத்தனை உணர்ச்சிகளையுமே அநாயாசமாக வெளிப்படுத்தி ரசிக்க வெச்சிருக்காரு.. தேசிய விருது நிச்சயம்..

பழம்பெரும் இயக்குனராக சமுத்திரக்கனி.. சூப்பரா நடிச்சிருக்காரு.. ஹீரோவுக்கு இணையான கேரக்டர்.. போட்டி போட்டு நடிச்சிருக்காரு.. இதுவரை பார்க்காத சமுத்திரக்கனிய கண்முன்னாடி காட்டியிருக்காரு.. ஒரு கதாபாத்திரத்தை உருவாக்குற கலைஞனுக்கே இருக்கற கர்வத்தோட ஸ்கிரீன்ல நடிச்சிருக்காரு.. நாயகி பாக்யஸ்ரீ அற்புதமாக நடிச்சிருக்காங்க.. அப்பாவியாக பேச்சு, அசத்தலான நடிப்பு என அந்த காலத்து நடிகைகள கண்முன்னாடி நிறுத்தியிருக்காங்க..

ராணா, போலீசாக வந்து வித்தியாசமான நடிப்ப கொடுத்திருக்காரு.. ஆனா சில சீன்ஸ்ல அது கொஞ்சம் ஓவர் டோஸ் ஆக இருக்கு.. கஜேஷ், நிழல்கள் ரவி, காயத்ரி, வையாபுரி, ரவீந்தர் விஜய் என அத்தனை பேருமே படத்துக்கு தேவையான நடிப்ப கொடுத்திருக்காங்க..ஜானு சந்தர் இசையில பாடல்கள் மற்றும் பின்னணி இசை நல்லா இருக்கு..

டானி சஞ்செஸ் லோபெஸோட ஒளிப்பதிவு அந்த கால சென்னையை சிஜி உதவியோட அழகா காட்டியிருக்கு.. முழுக்க முழுக்க செட்டுக்குள்ளயே கதை நடந்தாலும் அழகான லைட்டிங் மூலம் மேலும் அழகு சேர்த்திருக்காரு.. ராமலிங்கத்தோட கலை இயக்கம் பிரமிக்க வெச்சிருக்கு.. அந்த காலத்து பொருட்கள பாத்து பாத்து செதுக்கி இருக்காங்க..நிஜமா நாம மாடர்ன் ஸ்டுடியோவுக்குள்ள போய்ட்டு வந்த உணர்வ படம் கொடுத்திருக்கு..

இது தியாகராஜ பாகவதரோட கதையா
இல்லையான்னு படம் பார்த்து தெரிஞ்சுக்கோங்க. எழுதி இயக்கியிருக்கற செல்வமணி செல்வராஜ் இரண்டு நபர்களுக்குள்ள இருக்குற ஈகோவ பத்தி ஒரு அழகான திரைக்கதை எழுதி முடிச்ச அளவுக்கு சுவாரஸ்யமா கொடுக்க நினச்சிருக்காரு.. படத்தோட நீளம் கொஞ்சம் மைனஸ்.. முதல் பாதி மூனு பேருக்குள்ள நடக்குற நாடகத்த வெச்சு அழகா இருந்துச்சு.. இரண்டாம் பாதி அப்படியே த்ரில்லர் மோடுக்கு மாறி வேறுமாதிரியான உணர்வ கொடுத்திருக்கு.. மொத்தத்துல காந்தா கனவு தொழிற்சாலையின் மறுபக்கம்..

Related posts:

இரா என்டர்டைன்மெண்ட் சார்பில் நந்தன் படத்தை எழுதி, இயக்கி, தயாரித்துள்ளார் இரா.சரவணன்.

மேக்ஸ் கன்னடதிலும் தமிழிலும் ஒரே சமயதில் உருவாக்கபட்ட படம் கிச்சா சுதீப்க்கு தமிழில் தன் கி ஓங்கவேண்டும் என்ற ஆசையில் தய...

கெவி – மலைமக்களின் உளறல்... எதிர்வினையாக ஒரு போராட்டம்

திரை விமர்சனம் : ‘அனந்தா’

எவன் உழுகிரானோ அவனுக்கு தான் நிலம் சொந்தம் என்ற ஒற்றை கருத்தை மையமாக வைத்து உருவாகியிருக்கும்  படம் தான் தங்கலான்

திரைப்பட விமர்சனம்: “ராம் அப்துல்லா ஆண்டனி” – சமூக விழிப்புணர்வை கூறும் முயற்சி திருவள்ளூர் மாவட்டத்தை மையமாகக் கொண்ட க...

தணல் திரைவிமர்சனம்

HIT 3 படத்தின் திரை விமர்சனம்