Friday, October 24
Shadow

சூழல் வெப் சீரியஸ் – விமர்சனம்

சூழல் வெப் சீரியஸ் – விமர்சனம்

அமேசான் பிரைம்யில் சூழல் வெப் சீரியஸ் முதல் பாகம் இந்திய ஓடிடி உலகில் மிக பெரிய வெற்றியை பெற்றது அதை தொடர்ந்து இதன் இரண்டாம் பாகம் வெளியாகியுள்ளது.

இதன் முதல் பாகத்தை எழுதிய தயாரித்த புஷ்கர் காயத்ரி தான் இந்த இரண்டாம் பாகத்தையும் எழுதி தயாரித்துள்ளனர். இந்த இரண்டாம் பாகத்துக்கும் மிக பெரிய ஒரு எதிர்ப்பார்ப்பு உள்ளது அதை பூர்த்தி செய்ததா என்று பார்ப்போம்.

இந்த தொடரில் கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ், லால், சரவணன், மஞ்சிமா மோகன், கயல் சந்திரன், கௌரி கிஷன், சம்யுக்தா விஸ்வநாதன், மோனிஷா பிளெஸ்ஸி, ஸ்ரீஷா, அபிராமி போஸ், நிகிலா சங்கர், ரினி, கலைவாணி பாஸ்கர், சாந்தினி தமிழரசன், அஷ்வினி நம்பியார் இதை இயக்கியவர்கள் பிரம்மா மற்றும் கே.எம்.சர்ஜன் இசை சாம் .சி.எஸ்

கதைக்குள் போகலாம்;

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பிரபல வழக்கறிஞரும் சமூக ஆர்வலருமான லால் கடற்கரை வீட்டில் சுட்டுக் கொல்லப்பட்டார். கொலை வழக்கின் முதன்மை விசாரணை அதிகாரியான சப்-இன்ஸ்பெக்டர் கதிர், காவல் நிலைய ஆய்வாளர் சரவணனுடன் சேர்ந்து விசாரணையைத் தொடங்குகிறார். அந்த நேரத்தில், லால் கொல்லப்பட்ட வீட்டிற்கு வெளியே பூட்டிய மர அலமாரிக்குள் கையில் துப்பாக்கியுடன் கௌரி கிஷன் காணப்படுகிறார். அவரை கைது செய்து விசாரித்தாலும், அவரிடம் இருந்து எந்த தகவலும் கிடைக்கவில்லை

யாரோ ஒரு கொலையை செய்துவிட்டு எப்படி ஒரு அலமாரியில் ஒளிந்து கொண்டு தப்பித்திருப்பார்கள் என்று தெரியாமல் குழம்பி நிற்கிறது கதிர், சரவணன் தலைமையிலான போலீஸ் டீம்.

 

இந்நிலையில் வக்கீல் லாலைக் கொன்றதாக மாவட்டத்தின் வெவ்வேறு காவல் நிலையங்களில் 7 இளம்பெண்கள் சரண் அடைந்தனர், அவர்கள் அனைவரும் கொலையைப் பற்றி ஒரே கதை சொல்கிறார்கள். கௌரி கிஷன் உட்பட மொத்தம் 8 பெண்கள் ஒரு கொலை வழக்கில் சரணடைந்தாலும், அவர்கள் அனைவருக்கும் ஒருவருக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதும், அவர்களின் பின்னணி குறித்த எந்த தகவலும் கிடைக்காதது போலீசாருக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்துகிறது. ஆனால், இந்தக் கொலையின் உண்மையான பின்னணியையும், கொலையாளி யார் என்பதையும் கண்டுபிடிப்பதில் தீவிரமாக இருக்கும் கதிர், அதை எப்படி சுவாரஸ்யமாகவும் பிரமாண்டமாகவும் கண்டுபிடிப்பார் என்பதைச் சொல்கிறார், ‘சுழல் 2’.

சிறுமிகளுக்கு எதிரான பாலியல் துஷ்பிரயோகத்தை மையமாக வைத்து ‘சுழல்’ என்ற விறுவிறுப்பான மற்றும் சுவாரசியமான வெப் தொடரை வழங்கிய புஷ்கர் & காயத்திரி குழுவினர், ‘சுழல் 2’ முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இருந்தாலும், 8 எபிசோடுகளிலும் வித்தியாசமான கதைக்களத்துடன் தொடரை முன்னெடுத்துச் செல்கின்றனர்.

முதல் பாகத்தில், தன்னை பாலியல் வன்கொடுமை செய்த சித்தப்பாவை கொலை செய்யும் ஐஸ்வர்யா ராஜேஷ், சிறையில் தண்டனை அனுபவித்தாலும், அந்த சிறைதான் அவரது கதாபாத்திரத்தை கதையுடன் நகர்த்துகிறது, போலீஸ் இன்ஸ்பெக்டராக வரும் சரவணனின் எதிர்பாராத திருப்பம், கொலை செய்யப்பட்ட வழக்கறிஞர் லால் மற்றும் இளம் பெண்களின் வித்தியாசமான பார்வைகள். லாலின் மகன், மனைவி மற்றும் கார் டிரைவர் ஆகியோருடன் கொலை வழக்கும், சிறையில் கைதியாக இருக்கும் சரோஜாவும். அந்தத் தொடரில் வரும் அனைத்து கதாபாத்திரங்களும், அதில் நடிக்கும் நடிகர் நடிகைகளும் திரைக்கதையில் விறுவிறுப்பாக பயணித்திருக்கிறார்கள்.

புஷ்கர், காயத்ரியின் கதையும் திரைக்கதையும் பல திருப்பங்களுடன் பயணித்தாலும், தொடரில் பேசப்படும் சமூகப் பிரச்னைகள் ரசிகர்களின் மனதில் மிக வலுவாகப் பதிந்துள்ளன. குறிப்பாக கதாபாத்திர வடிவமைப்புகள் தொடரின் மிகப்பெரிய பலம். நாட்டில் நடக்கும் தவறுகளுக்குப் பின்னால் சாதாரண தொழிலாளிகளும் இருக்கிறார்கள் என்பதை மஞ்சுமா மோகன் மற்றும் அவரது அன்புக் கணவர் கயல் சந்திரனின் கதாபாத்திர வடிவமைப்புகள் மிக நேர்த்தியாக பதிவு செய்துள்ளன.

 

ஒளிப்பதிவாளர் ஆபிரகாம் ஜோசப், தயாரிப்பாளர் செய்த செலவுகளை திரையில் பிரமாண்டமாக காட்டியுள்ளார். ஒரு திருவிழாவின் போது கதை நடப்பதால், தொடரின் பெரும்பாலான காட்சிகள் கூட்டத்தால் நிரம்பியுள்ளன. இது உண்மையான திருவிழாவா? அல்லது படப்பிடிப்பிற்காக ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியா?, என்று கண்டுபிடிக்க முடியாத வகையில் ஒளிப்பதிவாளர் பணியாற்றியிருக்கிறார். இவரின் அனைத்து வித்தைகளும் அனைத்து காட்சிகளையும் பிரமாண்டமாக காட்டி பார்வையாளர்களை பிரமிக்க வைத்துள்ளது.

பலத்த சத்தத்தை கேட்டாலே பின்னணி இசை சாம்.சி.எஸ் என்று புரிந்து கொள்ளலாம். காளிகள் அரக்கன் வேட்டையாடும் போது சத்தம் தேவை, பல இடங்களில் ஏன் ஒரே ஒலியாக இருக்க வேண்டும்?. பாடல்களில் குறை காண முடியாத அளவுக்கு உழைத்திருக்கும் இசையமைப்பாளர் சாம்.சி.எஸ், பின்னணி இசையின் போது சத்தத்தைக் கொஞ்சம் குறைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

பல சவால்களுடன் பணியாற்றிய எடிட்டர் ரிச்சர்ட் கெவின், அத்தனை சவால்களையும் திறமையாக எதிர்கொண்டு சாதித்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். இது முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இருக்க வேண்டும், அதன் கதைக்களம் முதல் பாகத்தின் கருவாக இருக்க வேண்டும், ஆனால் முதல் பாகத்தை ஒத்திருக்காமல், அதே சமயம், பல்வேறு கதாபாத்திரங்கள் மற்றும் திருப்பங்களுடன் பயணிக்கும் தொடர்ச்சி பார்வையாளர்களால் குழப்பமின்றி புரிந்து கொள்ளப்பட வேண்டும்.

கதை மற்றும் திரைக்கதைக்கு காட்சியமைப்புகளை புஷ்கர் மற்றும் காயத்ரி வடிவமைத்துள்ளனர், பிரம்மா மற்றும் சர்ஜுன்.கே.எம் இயக்கியுள்ளனர். இருவரும் கதை மற்றும் திரைக்கதை எழுத்தாளர்களின் யோசனைகளுடன் பணியாற்றினர்.

பிரம்மா, சர்ஜுன்.கே.எம் இருவருக்குமே தனித்தனி ஸ்டைல் ​​இருந்தாலும், அதை இதில் காட்டாமல், புஷ்கர், காயத்ரியின் வழியைப் பின்பற்றி, அனைத்துத் தரப்பினரும் பார்க்கக்கூடிய நேர்மையான பணியை வழங்கியுள்ளனர்.

மொத்தத்தில் ‘சுழல் 2’ படம் பார்ப்பவர்களை பிரமிக்க வைக்கும்