
தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக வலம் வந்தவர் தான் தொகுப்பாளினி ஃபரினா ஆசாத். இவர் கிச்சன் கலாட்டா,அஞ்சறை பெட்டி போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக பணியாற்றினார்.
ஃபரினா ஆசாத் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அழகு என்ற தொடரின் மூலம் சீரியல்களில் நடிகையாக அறிமுகமானார்.
ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா என்ற தொடரில் வெண்பா என்ற எதிர்மறையான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
பாரதி கண்ணம்மா சீரியலில் வில்லியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் பிரபல சீரியல் நடிகைகளில் முக்கிய நடிகையாக ரசிகர்களை கவர்ந்து வந்தார்.
தொகுப்பாளினியும் நடிகையுமான ஃபரினா ஆசாத் ரஹ்மான் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.தற்போது இவர்களுக்கு அழகான ஆண் குழந்தை உள்ளது.
தற்போது தனது செல்லமகனின் பிறந்தநாளை கொண்டாடிய புகைப்படங்களை ஃபரினா அவரது வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
பிரமாண்டமாக கொண்டாடபட்ட ஃபரினா மகனின் பிறந்தநாள் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.