
தக் லைஃப் – திரைவிமர்சனம்
– மெகா மாஸ் ஆக்ஷன் படமாக வெளியீடு!
இயக்கம்: மணிரத்தினம்
நடிப்பு: கமல்ஹாசன், எஸ்.டி.ஆர், திரிஷா மற்றும் நட்சத்திரப் பட்டாளம்
இசை: ஏ.ஆர். ரகுமான்
தயாரிப்பு: ராஜ்கமல் இன்டர்நேஷனல் & மெட்ராஸ் டாக்கீஸ்
மாபெரும் வெற்றிப் பெற்ற ‘நாயகன்’ படத்திற்கு பிறகு மீண்டும் இணைந்துள்ள உலகநாயகன் கமல்ஹாசனும், இயக்குனர் மணிரத்தினமும் “தக் லைஃப்” திரைப்படத்தில் சரித்திரமான கூட்டணியை துவக்கியுள்ளனர். அவர்களுடன் இளம் ஹீரோ எஸ்.டி.ஆர் இணைந்து நடித்துள்ளார்.
தக் லைஃப் என்பது ஒரு கேங்ஸ்டர் கதையம்சத்துடன் கூடிய குடும்பத்தோடு பிணைந்த உணர்வுப்பூர்வமான படமாகும். கமல்ஹாசன் சக்திவேல் எனும் தாதா வேடத்தில் அசத்துகிறார். அவரால் வளர்க்கப்படும் சிறுவன் அமரன் (எஸ்.டி.ஆர்) ஒரு கட்டத்தில் அவரது எதிரியாக மாறுகிறார். இருவருக்கும் இடையே நடைபெறும் மோதல் பரபரப்பாகவும், சாகசமாகவும் ரசிகர்களை மயக்குகிறது.
கிளைமாக்ஸ் சண்டைக்காட்சியில் கமல்ஹாசனும் எஸ்.டி.ஆரும் ஒருவருக்கொருவர் எதிராக தீவிரமாக மோதும் காட்சிகள், தமிழ்சினிமாவின் உச்சமாக பார்க்கப்படுகின்றன.
திரிஷா, கமல் மற்றும் எஸ்.டி.ஆர் இருவருக்கும் இடையில் காதல் வேடத்தில் வருகிறார்.
அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி, வையாபுரி, ஜோஜு ஜார்ஜ், அலி ஃபாசல் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
ஏ.ஆர். ரகுமான் இசையில், “ஜிங்குஜா” போன்ற பாடல்கள் ரசிகர்களின் வெறித்தனமான வரவேற்பை பெற்றுள்ளன.
ரவி கே சந்திரன் ஒளிப்பதிவு செய்த காட்சிகள் ஹாலிவுட் தரத்தில் இருக்க, ஹிமாலயா பின்னணியில் எடுக்கப்பட்ட காட்சிகள் மனதை கவர்கின்றன.
இது வெறும் தாதா படம் மட்டுமல்ல. இதில் அண்ணன்-தங்கை பாசம், கணவன்-மனைவி அன்பு என பலதரப்பட்ட உணர்வுகளும் பின்னணியாக இருக்கின்றன.
தக் லைஃப் என்பது மணிரத்தினம் – கமல்ஹாசன் – எஸ்.டி.ஆர் – ஏ.ஆர். ரகுமான் என்ற சக்திவாய்ந்த கூட்டணியின் சிறப்பான முயற்சி.
தக் லைஃப் – தமிழ் சினிமாவின் புதிய பரிணாமம்.
மொத்ததில் தக் லைஃப் ரசிகர்களை தக்கவைத்துக்கொள்கிறது
