Friday, October 24
Shadow

தமிழ் நடிகர் தக்ஷன் விஜய் மலையாளத்தில் வில்லனாக அறிமுகமாகும் ‘இத்திக்கர கொம்பன்’

தமிழ் நடிகர் தக்ஷன் விஜய் மலையாளத்தில் வில்லனாக அறிமுகமாகும் ‘இத்திக்கர கொம்பன்’

யானையை மையமாக வைத்து உருவாகும்

‘இத்திக்கர கொம்பன்’

 குழந்தைகளைக் கவர வருகிறது.!

 திரைப்படங்களில் விலங்குகள் பங்கேற்கும் கதைகள், விலங்குகளை மையப்படுத்திய கதைகள் குழந்தைகளைக் கவரும் வகையில் அமைந்து பெரிய வெற்றிப் படங்களாக மாறி இருக்கின்றன.அவை மொழியைக் கடந்து மனங்களைக் கவரும்.

அந்த வகையில்’இத்திக்கர கொம்பன்’ என்கிற மலையாளப்படம் உருவாகி வருகிறது. தமிழில் மொழிமாற்றம் செய்து வெளியாக உள்ளது.

இப்படத்தில் சாது என்கிற ஒரு யானை பிரதான பாத்திரத்தில் நடித்துள்ளது.அந்த யானைக்குக் கதையில் உள்ள இடமும் காட்சிகளும் குழந்தைகள் மனதைக் கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. இப்படத்தை ஸ்ரீ லட்சுமி சினி புரொடக்ஷன்ஸ் சார்பில் ராஜன் பாப்பன், ஸ்ரீலா வடகரா தயாரித்துள்ளனர்

 மலையாளத்தில் அறிமுகமான நடிகர்களான டினி டோம், டோனி, கரீனா குறுப்பு, கேசு , சுமேஷ், ஸ்ரீஜா போன்ற நடிப்புக் கலைஞர்கள் முக்கியமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளனர்.

இப்படத்தில் வில்லனாக தமிழ் நடிகர் தக்ஷன் விஜய் மலையாளத்தில் அறிமுகமாகிறார்.அவர் தூத்துக்குடி செல்வம் என்கிற கதாபாத்திரத்தில் மிரட்டும் தோற்றத்தில் வருகிறார். அசர வைக்கும் நடிப்பிலும் மிரள வைக்கும் சண்டைக் காட்சிகளிலும் முத்திரை பதித்திருக்கிறார்.

 படத்திற்குத் திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார் கே. ராஜு. இவர் பிரபல இயக்குநர் கிருஷ்ணசுவாமியிடம் துணை இயக்குநராகப் பணியாற்றியவர். இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

 இப்படத்திற்கு பினீஷ் பாலகிருஷ்ணன் – சீனு வயநாடு ஆகியோர் இசை அமைத்திருக்கிறார்கள்.

வீ.கே . பிரதீப் ஒளிப்பதிவு செய்துள்ளார். யானை தோன்றும் காட்சிகளை அற்புதமாகப் படம் பிடித்துள்ளார்.

சாபு இரன்மல கலை இயக்கத்தையும், ஜான்சன் தாமஸ் படத்தொகுப்பையும் கவனித்துள்ளனர்.சண்டைக் காட்சிகளை ஆக்சன் அஷ்ரப் குருக்கள் அமைத்துள்ளார்.

படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில் படப்பிடிப்பிற்குப் பிந்தைய மெருகேற்றும் பணிகள் நடந்து வருகின்றன. ஒரு விறுவிறுப்பான கதையுடன், குழந்தைகளைக் கவரும்படியான, குடும்பத்தினருடன் பார்க்கும்படியான ஒரு திரைப்படமாக இந்த

  • ‘இத்திக்கர கொம்பன்’ படம் உருவாகி வருகிறது.இப்படத்தின் போஸ்டர் சமூக ஊடகங்களில் வெளியாகி பரபரப்பாகி வருகிறது.

Related posts:

அது வாங்குனா இது இலவசம்’ படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை வெளியிட்ட நடிகை நமீதா*

வீரவணக்கம் படத்தில் கம்யூனிச தோழராக சமுத்திரக்கனி*

Ajith sir would always get emotionally disturbed about news flashing on murders, acid attacks, and all kinds of harassme...

நேச்சுரல் ஸ்டார்' நானி - இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடேலா - தயாரிப்பாளர் சுதாகர் செருகுரி - எஸ் எல் வி சினிமாஸ் கூட்டணியில் தய...

ரெட்ரோ வெற்றி, மீடியா நண்பர்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த சூர்யா!

இந்த தலைமுறையின் காதலுக்கான குரலாக இருக்கும் ஜூபின் நௌடியல் !

ஆவலோடு காத்திருக்கும் அஜித் ரசிகர்களுக்கு பிளையிங் கேமராவில் அப்டேட் போட்ட விடாமுயற்சி டீம் விடாமுயற்சி சூட்டிங் முடிந்த...

Witness the enhanced version of #Indian2 🇮🇳