
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு முன்னணி நடிகர் என்றால் அது விஜய் சேதுபதி இவரின் படம் வெளியாகுது என்றால் ரசிகர்களிடம் ஒரு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கும் அந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியாகி இருக்கும் தலைவன் தலைவி படத்தின திரைவிமர்சனம் பார்ப்போம்.
இயக்குனர் பாண்டியராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நித்யா மேனன், அருள் தாஸ், தீபா, காளிவெங்கட், ரோஷினி , ஆர்.கே. சுரேஷ், யோகி பாபு செம்பியன். சரவணன், வினோத் சாகர் மற்றும் பலர் நடிப்பில் சந்தோஷ் நாராயணன் இசையில் சுகுமார் ஒளிப்பதிவில் வெளிவந்திருக்கும் திரைப்படம் தலைவன் தலைவி
கதையின் கரு:
மிக நெருக்கமாக இருக்கும் கணவன் மனைவி பெற்றோர்களின் தவறுதலால் பிரிகிறார்கள் இவர்கள் மீண்டும் ஒன்று சேர்ந்தார்களா இல்லையா என்பதுதான் இந்த படத்தின் கரு
கதைக்குள் போகலாம்
தன் தங்கை பெயரில் மதுரையில் ஹோட்டல் நடத்தும் விஜய் சேதுபதிக்கு சில பொய்களை சொல்லி நித்தியா மேனனை திருமணம் செய்து வைக்கிறார்கள். இந்தப் பொய்கள் தெரிந்தும் வித்யா மேனன் அவரை ஏற்றுக் கொள்கிறார். இதனால் மனைவியின் மீது அதிக அளவு பாசத்தை கொட்டும் விஜய் சேதுபதி நாளடைவில் தன் மனைவின் மீது இருக்கும் பாசத்தால் தங்கை பெயரில் இருந்த ஓட்டலின் பெயரை மனைவி பெயருக்கு மாற்றுகிறார். இங்கிருந்து தான் பிரச்சனை தொடங்குகிறது.
இதை தாங்காத தங்கை ரோஷினி அம்மா தீபாவிடம் கலகம் மூட்டுகிறார். இதனால் விஜய் சேதுபதி நித்தியாமேனனுக்குள் சண்டை சச்சரவுகள் ஏற்படுகிறது இந்த சண்டையை விஜய் சேதுபதி அம்மா தீபாவும் நித்தியா மேனன் அம்மா இருவரும் சேர்ந்து குடும்பத்தில் மிகப்பெரிய ஒரு கலவரத்தை உண்டு பண்ணுகிறார்கள் இந்த கலவரம் விவாகரத்து வரை செல்கிறது இந்த தம்பதியினர் மீண்டும் ஒன்று சேர்ந்தார்களா இல்லையா என்பதுதான் படத்தின் மீதி கதை.
இயக்குனர் பாண்டியராஜ் படங்கள் என்றாலே நிச்சயமாக ஒரு குடும்ப கதையாக தான் இருக்கும் அந்த வகையில் இந்த படத்திலும் ஒரு குடும்பத்தின் கதையை எடுத்து அதில் விவாகரத்து என்பதை மையமாக வைத்து அதற்கு ஒரு அற்புதமாக திரைக்கதை அமைத்து ரசிகர்களை ரசிக்க வைத்திருக்கிறார்.
குறிப்பாக விஜய் சேதுபதியும் நித்யா மனனும் போடும் சண்டைக் காட்சிகள் மிகவும் அற்புதமாக படமாக்கி இருக்கிறார். பல இடங்களில் இந்த சண்டை நம்மைச் சுற்றி நடப்பது போல் தெரியும் அந்த அளவுக்கு மிக தத்ரூபமாக காட்சிகளைஅமைத்திருக்கிறார். குறிப்பாக கோயிலில் குழந்தைக்கு மொட்டை அடிக்க போகும் இடத்தில் ஏற்படும் சண்டைகளை மிகவும் நகைச்சுவையோடு அதில் ஒரு நல்ல மெசேஜ் கொடுத்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். இயக்குனர் பாண்டியராஜ் மீண்டும் ஒரு குடும்பக் கதையின் மூலம் நாம் நெஞ்சை வருடுகிறார்.
படத்திற்கு மிகப்பெரிய பலம் என்று சொன்னால் அது விஜய் சேதுபதியும் நித்யா மேனன் என்று தான் சொல்ல வேண்டும் இருவரும் தன் கதாபாத்திரத்தை உணர்ந்து மிக அற்புதமான ஒரு நடிப்பை கொடுத்திருக்கிறார்கள் இந்த இருவரின் நடிப்பும் நம் நம்மை திரையரங்கில் பரவசப்படுத்துகிறது இவர்கள் செய்யும் நகைச்சுவையும் நம்மை ரசிக்க வைத்துள்ளது. நித்தியாமன் விஜய் சேதுபதி இருவரும் யாருக்கும் சளைத்தவர்களை என்று போட்டி போட்டு தான் நடித்திருக்கிறார்கள் என்று சொல்ல வேண்டும்.
அதேபோல படத்தில் நடித்த ஒவ்வொரு கதாபாத்திரங்களும் தன்னை உணர்ந்து மிக அற்புதமான ஒரு நடிப்பின் மூலம் படத்திற்கு மிகப்பெரிய வெற்றியை ஈட்டு தந்து இருக்கிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.
படத்திற்கு மிகப்பெரிய பலம் சந்தோஷ நாராயணன் இசை பாடல்களும் சரி பின்னணி செய்யும் சரி மிக அற்புதமாக கொடுத்து கதையின் ஓட்டத்தை புரிந்து அதன் தன்மைக்கு ஏற்ப பின்னணி செய்யும் மூலம் ரசிகர்களை கவர்கிறார்.
மைனா சுகுமார் அற்புதமான ஒளிப்பதிவின் மூலம் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார் இயக்குனரின் மனதை புரிந்து அதற்கு ஏற்ப காட்சிகள் அமைத்து கொடுத்திருப்பது அற்புதம்
மொத்தத்தில் தலைவன் தலைவி இன்றைய குடும்பங்களின் நிஜம்.