Thursday, January 15
Shadow

தளபதி விஜய்யின் இறுதி சினிமா மேடை : ‘ஜன நாயகன்’ இசை வெளியீட்டு விழா ஜனவரி 4 அன்று ZEE5-தளத்தில் ஒளிபரப்பாகிறது !!

*தளபதி விஜய்யின் இறுதி சினிமா மேடை : ‘ஜன நாயகன்’ இசை வெளியீட்டு விழா ஜனவரி 4 அன்று ZEE5-தளத்தில் ஒளிபரப்பாகிறது !!*

 

தமிழ் ரசிகர்களுக்காக ZEE5 ஒரு வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தருணத்தை வழங்குகிறது. தளபதி விஜய் நடித்த கடைசித் திரைப்படமான ‘ஜன நாயகன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா, ஜனவரி 4 ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு, ZEE தமிழ் தொலைக்காட்சி மற்றும் ZEE5 தளத்தில் பிரத்யேகமாக ஸ்ட்ரீம் ஆகிறது.

 

H. வினோத் இயக்கத்தில், KVN புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ஜன நாயகன், அரசியல் பின்னணியுடன் கூடிய ஆக்‌ஷன் திரில்லர் திரைப்படமாகும். தளபதி விஜய் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்தப் படத்தில், பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜு, கௌதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ் ராஜ், நரேன் மற்றும் பிரியாமணி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். KVN நிறுவனத்தின் முதல் தமிழ் தயாரிப்பாக உருவாகியுள்ள இந்தப் படம், நடிகராக விஜய் மேற்கொள்ளும் இறுதி படம் என்பது குறிப்பிடத்தக்கது.

 

மலேசியாவில் பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா, ரசிகர்களின் நினைவில் என்றும் பதியும் வகையில் அமைந்தது. வெளிநாட்டில் நடைபெற்றதால் நேரில் பங்கேற்க முடியாத ரசிகர்களுக்காக, இந்த வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த நிகழ்வை ZEE5 நேரடியாக ரசிகர்களின் இல்லங்களுக்கே கொண்டு வருகிறது.

 

இந்த விழாவில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டதுடன், தளபதி விஜய் நடிகராக தனது திரை வாழ்க்கையின் இறுதி மேடை உரையை வழங்கி, ரசிகர்களை உருக வைத்தார். அவரது திரைப்பயணத்திற்கு மரியாதையாக, அவரது பிரபலமான பாடல்களும் நடனமும் கூடிய நேரடி மேடை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. மேலும், இயக்குநர்கள் நெல்சன் திலீப்குமார், லோகேஷ் கனகராஜ், அட்லீ உள்ளிட்ட பல முன்னணி திரையுலக பிரபலங்களும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

 

ஒரு உட்ச நட்சத்திரத்தின் விடைபெறும் நிகழ்வு மட்டுமல்ல — தமிழ் சினிமாவின் வரலாற்றுச் சிறப்பு மிக்க தருணம்.

 

‘ஜன நாயகன்’ இசை வெளியீட்டை ஜனவரி 4, மாலை 4.30 மணிக்கு, தமிழ் ZEE5-ல் தளத்திலும் ZEE தமிழ் தொலைக்காட்சியிலும் தவறாமல் காணுங்கள்.

 

🔗https://youtu.be/SlG3_ABHcJI?si=-nHSNABKR2EKEdvt

Related posts:

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளம், பிரபல இயக்குநர் ராமுடன் இணைந்து, அவரது அடுத்த படமான "பறந்து போ" படத்தை வழங்குகிறது !!

டிசம்பரில் வெளியாகும் 'ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்'*

யோகி பாபு அப்படி செய்யும் நடிகர் இல்லை "

இயக்குநர் மஜீத் இயக்கத்தில், விமல், யோகிபாபு நடிக்கும் புதிய திரைப்படம் நிறைவடைந்தது விரைவில் திரையில் வெளியாகிறது !!*

திருமணத்திற்கு வந்த நட்சத்திரங்களுக்கு எல்லாம் ஏராளமான விலை உயர்ந்த பரிசுகள் கொடுத்து அசத்திய அம்பானி குடும்பத்தார்

நடிகை சிம்ரன் வெளியிட்ட 'ரெட் லேபிள் ' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

எளிய மக்களின் பண்டிகைகால போராட்டங்களை எதார்த்தமாக பதிவு செய்திருக்கும் ‘தீபாவளி போனஸ்’! - அக்டோபர் 25 ஆம் தேதி வெளியாகிற...

பொயட்டுகள் லிரிக் என்ஜினியர்களுக்கு நடுவே ஒரு தேனெடுக்கும் தொழிலாளி Pottuvil Asmin : A Beacon in the Sea of Contemporar...