Saturday, January 3
Shadow

தீயவர் குலை நடுங்க திரைவிமர்சனம்

தீயவர் குலை நடுங்க… இந்த படத்தோட கதை என்னன்னா.. படத்தோட ஆரம்பத்துலயே எழுத்தாளர் ஒருவர் முகமூடி அணிந்த மர்ம நபரால் கொடூரமாக கொலை செய்யப்படுறாரு.. இந்த கொலை வழக்க விசாரிக்கற அதிகாரியா அர்ஜுன் வர்றாரு.. இதுஒரு புறம் இருக்க ஐஸ்வர்யா ராஜேஷ், ஆட்டிஸம் பாதிக்கப்பட்ட குழந்தைகள் படிக்கிற ஸ்கூல்ல டீச்சரா இருக்காங்க.. இவங்களுக்கும் மற்றொரு ஹீரோ பிரவீன் ராஜாவுக்கும் தனியா லவ் ட்ராக் ஓடிட்டு இருக்கு.. இதுக்கிடையில மேலும் சில கொலைகள் நடக்குது..

யார் இந்த கொலைகள செஞ்சாங்கன்னு அர்ஜூன் விசாரணைக்கும் போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியே வருது.. இந்த கொலைகள செஞ்சது யாரு? எதுக்காக கொலை செஞ்சாங்க.. இந்த கொலைகளுக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்க்கும் என்ன தொடர்பு அப்படிங்கறத பரபரப்பா சொல்ல முயற்சி செஞ்சிருக்காங்க..

 

ஆக்ஷன் கிங் அர்ஜுன் இப்பவும் அதே கம்பீரத்தோட‌ ஸ்க்ரீன்ல வலம் வர்றாரு.. கொலையாளி யாருன்னு அவரு விசாரிக்கும் காட்சிகள் நல்லாவே இருக்கு.. இதுக்கு இடையில ஐஸ்வர்யா ராஜேஷ் வர்ற சீன்ஸ் படத்தோட சுவாரஸ்யத்துக்கு வேகத்தடையா இருக்கு.. சண்டைக் காட்சிகள்ல பழைய அர்ஜுனோட வேகமும் ஸ்டைலும் ரசிக்க வைக்குது.. ஐஸ்வர்யா ராஜேஷ்தான் பிரதான கேரக்டர் அப்படிங்கறதால அவருக்குன்னு ஆக்ஷன் சீன்ஸ்லாம் வெச்சு வெறுப்பேத்தியிருக்காங்க.. மத்தபடி அவங்க நடிப்புல குறையில்ல.. பிரவீன் ராஜா அப்பாவியான கதாபாத்திரத்துல ஓரளவு நடிக்க முயற்சி செஞ்சிருக்காரு.. வேல ராமமூர்த்தி, அபிராமி வெங்கடாசலம், பிராங்ஸ்டார் ராகுல், தங்கதுரை உள்ளிட்டோர் நடிப்பு ஓகே தான்..‌ நடிகர் திலகம் சிவாஜியோட பையன் ராம்குமார அவ்ளோ பெரிய பெண் பித்தராக காட்டியிருப்பது கொஞ்சம் நெருடலா இருக்கு.. அவரையே கேவலமான வசனத்தையும் பேச வெச்சிருப்பது ஏன் என்று தெரியல..

 

சரவணன் அபிமன்யு ஒளிப்பதிவு அப்பார்ட்மெண்ட் காட்சிகள நல்லாவே காட்டியிருக்கு.. பரத் ஆசிவகன் இசை ஓகே ரகம்தான்..பெண்கள், சிறுமிகள்- குறிப்பாக மனநலம் பாதிக்கப்பட்ட, ஆட்டிசம் பிரச்சினை உள்ள குழந்தைகளுக்கு ஏற்படுற பாலியல் வன்கொடுமைகள பத்தி சொல்ல முயற்சி செஞ்சிருக்காரு இயக்குனர்.. ஆனா வலுவான திரைக்கதை இல்லாம பார்த்து பழகிய அதே புளித்துப்போன காட்சிகள வெச்சு ஏமாத்திட்டாருன்னே சொல்லலாம்.. முதல்பாதி எப்படா இன்டர்வெல் வரும் அப்படின்னு கேட்க வெச்சிருச்சு.. யாரு கொலை செஞ்சிருப்பாங்கன்னு முதல் காட்சிலயே தெரிஞ்சிடுது.. இடைவேளையில கொலையாளி யாருன்னு காட்டும் போது, இதையே இப்பத்தான் கண்டுபிடிக்கிறீங்களா அப்படிங்கற மொமண்ட்தான்.. இரண்டாம் பாதி ரொம்ப லென்த்தா போற மாதிரி ஃபீல் ஆகுது.. மொத்தத்துல தீயவர் குலை நடுங்க.. தயவு செஞ்சு ஆள விடுங்க..