Thursday, January 15
Shadow

நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி இருக்கும் தீவிர மிஸ்ட்ரி க்ரைம் த்ரில்லர் ‘ககன மார்கன்’ படத்தின் மூன்றாவது பார்வை வெளியாகியுள்ளது!

நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி இருக்கும் தீவிர மிஸ்ட்ரி க்ரைம் த்ரில்லர் ‘ககன மார்கன்’ படத்தின் மூன்றாவது பார்வை வெளியாகியுள்ளது!

விஜய் ஆண்டனி ஃபிலிம்ஸ் கார்ப்பரேஷன் மற்றும் மீரா விஜய் ஆண்டனியின் 12வது தயாரிப்பான ‘ககன மார்கன்’ படத்தின் மூன்றாவது லுக் தற்போது வெளியாகியுள்ளது. புகழ்பெற்ற எடிட்டராக இருந்து இயக்குநராக மாறிய லியோ ஜான் பால் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். மர்டர் மிஸ்ட்ரி க்ரைம் த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இந்தப் படம் நிச்சயம் பார்வையாளர்களை வசீகரிக்கும்.

நேற்று வெளியிடப்பட்ட மூன்றாவது லுக் போஸ்டர், ‘ககன மார்கனி’ன் புதிரான உலகத்தைப் பற்றிய ஆழமான பார்வையை ரசிகர்களுக்கு வழங்குகிறது. அதன் புதிரான கதைக்களம் மற்றும் வலுவான கதாபாத்திரங்கள் இந்த ஜானருக்கு மேலும் வலு சேர்க்கும்.

‘ககன மார்கன்’ படம் மூலம் நடிகர் விஜய் ஆண்டனியின் சகோதரி மகன் அஜய் திஷன் மிரட்டலான வில்லனாக அறிமுகமாகிறார். அவரது அசத்தலான நடிப்பு, விஜய் ஆண்டனியின் கதாபாத்திரத்துடன் இணையும் போது நிச்சயம் பார்வையாளர்களை இருக்கை நுனியில் அமர வைக்கும்.

நடிகர்கள் சமுத்திரக்கனி, மகாநதி ஷங்கர், ப்ரீத்திகா, வினோத் சாகர், பிரிகிடா, தீப்ஷிகா, கலக்க போவது யாரு அர்ச்சனா, கனிமொழி, மற்றும் அந்தகரம் நடராஜன் ஆகியோர் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இயக்குநர் லியோ ஜான் பால், ‘சூது கவ்வும்’ மற்றும் ‘இன்று நேற்று நாளை’ போன்ற வெற்றிப் படங்களில் தனது திறமையான படத்தொகுப்பிற்காக கொண்டாடப்பட்டவர். அவரது படத்தொகுப்பு நிபுணத்துவத்தை இயக்குநராக இந்தப் படத்தில் காட்ட இருக்கிறார். தொழில்நுட்பக் குழுவில் ஒளிப்பதிவாளராக யுவா எஸ், கலை இயக்குநராக ராஜா ஏ, இசையமைப்பாளராக விஜய் ஆண்டனி ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.

நீருக்கடியில் வரும் பிரம்மிக்க வைக்கும் காட்சிகள் அனைத்தும் மும்பையில் படமாக்கப்பட்டது. இது அனைத்து திரைப்பட ஆர்வலர்கள் மத்தியிலும் பேசப்படும் ஒன்றாக இருக்கும்.

தனித்துவமான கதைக்களம், திறமையான நடிப்பு போன்ற சிறப்பம்சங்களை கொண்ட ‘ககன மார்கன்’ விரைவில் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

Related posts:

#விடுதலை பாகம்2 புதிய அத்தியாயம் தொடங்குகிறது. தொலைநோக்கு பார்வையாளரான #வெற்றிமாறன் இயக்கிய படம்! 🌟 ஃபர்ஸ்ட் லுக் வெளியா...

சமகால அரசியலை பேச வரும் "நாளை நமதே

திருச்சியை பூர்வீகமாகக் கொண்ட டெல் கே.கணேசனின் 'டிராப் சிட்டி' மூலம் ஹாலிவுட்டில் தடம் பதிக்கிறார் யோகி பாபு*

தமிழ் நடிகர் தக்ஷன் விஜய் மலையாளத்தில் வில்லனாக அறிமுகமாகும் 'இத்திக்கர கொம்பன்'

தமிழ்நாடு முழுக்க 25,000 மரக்கன்றுகள் நடும் நடிகர் சௌந்தரராஜா 

நடிகர்கள் விஜய் சேதுபதி & சூரி ‘விடுதலை பார்ட் 2’ படத்திற்கான டப்பிங் பணிகளைத் தொடங்கியுள்ளனர்!*

அமரன்… வலுவான கதையாலும் மனதில் பதியும் சித்தரிப்புகளாலும் திரையரங்குகளில் 25

காதலிக்க மதுரை பையனை தேடும் சென்னை பொண்ணு - போஸ்டர் அலப்பறை