Thursday, January 15
Shadow

பாங்காக்கில் அசத்திய ஸ்ருதி ஹாசன்

*பாங்காக்கில் அசத்திய ஸ்ருதி ஹாசன்*

உள்ளூர் இசைக் குழுவுடன் எதிர்பாராத விதமாக இணைந்து ஸ்ருதிஹாசன் நடத்திய இசை நிகழ்ச்சி ரசிகர்களை உற்சாகமடைய செய்தது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘கூலி’ எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காக தற்போது தாய்லாந்து நாட்டில் உள்ள பாங்காக் நகரில் படக்குழுவினருடன் ஸ்ருதிஹாசன் முகாமிட்டிருக்கிறார். முன்னணி நட்சத்திர நடிகையும், பாடகியுமான ஸ்ருதிஹாசன் திட்டமிடப்படாத ஒரு இசை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அனைவரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறார்.

படப்பிடிப்பில் தன் பங்களிப்பை நிறைவு செய்த பிறகு ஸ்ருதி ஹாசனும், அவருடைய குழுவினரும் நகரத்தை வலம் வந்தனர். அந்தத் தருணத்தில் அங்கு நேரடியாக இசை நிகழ்ச்சி நடத்தும் கலை அரங்கத்தை பார்வையிட்டனர். பரபரப்பான சூழ்நிலையும், நேரடியாக இசைக் குழுவின் இசை நிகழ்ச்சியை முழுமையாக ரசிக்கும் கூட்டமும் அங்கு இருக்க .. மகிழ்ச்சி அடைந்த ஸ்ருதிஹாசன் அவர்களை ஊக்குவிப்பதற்காக மேடை ஏறினார்.

அவருடைய இந்த தன்னிச்சையான முடிவிற்கு அங்கு கூடியிருந்த ரசிகர்களிடத்தில் ஆரவாரமான வரவேற்பு கிடைத்தது. அவரும் மேடை ஏறி பாடல்களை பாடினார். மேலும் அதனை ஒரு மறக்க இயலாத மாலை நேரமாக மாற்றி அமைத்தார்.

அவர்களிடயே பேசும்போது, இந்த ஆண்டில் மேலும் சுயாதீன இசை ஆல்பங்களை வெளியிட திட்டமிட்டு இருப்பதாக தெரிவித்தார்.

இந்த ஆண்டின் பிரம்மாண்டமான பிளாக் பஸ்டர் ஹிட்டாகும் படமாக கருதப்படும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தயாராகும் ‘கூலி’ படத்தில் ஸ்ருதிஹாசன் தற்போது நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts:

மலேசிய நாடாளுமன்ற உறுப்பினரும் மலேசிய இந்திய காங்கிரஸ் துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ டாக்டர்.

100 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்த சீயான் விக்ரமின் 'தங்கலான் 'Chiyaan Vikram’s ‘Thangalaan’ joins 100Cr-Club!*

57th World Fest Houston பிலிம் ஃபெஸ்டிவல் இடம் பெற்று வெற்றி பெற்ற யாதும் ஊரே யாவரும் கேளிர்🤍 என்ற கருத்தை மையமாகக் கொண...

ஏவிஆர் அன்பு சினிமாஸ் தயாரிப்பில், இயக்குநர் பாலாஜி ஜெயபாலனின் இயக்கத்தில் பிரபல மலேசிய நடிகர் யுவராஜ் கிருஷ்ணசாமி நடிக்...

தி ராஜா சாப் – திரவிமர்சனம்

ஜியாவின் "அவன் இவள்" பர்ஸ்ட் லுக் வெளியானது

பனங்கறுக்கும் பால் சுரக்கும் அத நெனச்சே நீ கொண்டாடு! பசி மறக்கும் நாள் பிறக்கும் வலி மறந்தே நீ கூத்தாடு!✨🦋

#நொடிக்குநொடி நடித்த பூஜை விழாவின் காட்சிகள்