Saturday, July 25
Shadow

பின்னணி இசைக்கோர்ப்பு பணிகளில், ரெட் ஃபிளவர் திரைப்படம் !!

பின்னணி இசைக்கோர்ப்பு பணிகளில், ரெட் ஃபிளவர் திரைப்படம் !!

ஹங்கேரிய இசைக்குழுவின் பங்கேற்பில், ல், ரெட் ஃபிளவர் திரைப்படம் !!

ரெட் ஃபிளவர் திரைப்படத்திற்காக,
ஹங்கேரிய இசைக்குழுவுடன் இசையமைப்பாளர் சந்தோஷ் ராமின் பிரமாண்ட இசைக்கோர்ப்பு பணிகள் தீவிரம் !!

தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் “ரெட் ஃபிளவர்” !!

விக்னேஷ் நடிப்பில், இறுதிக்கட்டத்தை எட்டிய “ரெட் ஃபிளவர்” திரைப்படம் !!

ஸ்ரீ காளிகாம்பாள் பிக்சர்ஸ் சார்பில் K மாணிக்கம் தயாரிப்பில், நடிகர் விக்னேஷ் நடிப்பில், எதிர்காலத்தில் நடக்கும் கதைக்களத்தில், புதுமையான அதிரடி ஆக்சன் திரைப்படமாக உருவாகும் “ரெட் ஃபிளவர்” திரைப்படம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. எதிர்காலத்தை தத்ரூபமாக காட்டும் வகையில் இதன் VFX பணிகள் தற்போது உலகமெங்கும் பிரம்மாண்டமாகத் நடந்து வருகிறது இந்நிலையில், தற்போது ஹங்கேரிய இசைக்குழுவுடன் இசையமைப்பாளர் சந்தோஷ் ராம் இப்படத்திற்காக பின்னணி இசைக்கோர்ப்பு பணிகள் துவக்கியுள்ளார்.

தமிழ் இசைத்துறையில் நம்பிக்கைக்குரிய புதிய திறமையான சந்தோஷ் ராம், மறக்கமுடியாத மற்றும் புதுமையான ஒலிப்பதிவை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு, இந்தத் திரைப்படத்தில் தனது முழுப் படைப்பாற்றலை செலுத்தி வருகிறார்.

இது குறித்து சந்தோஷ் ராம் கூறுகையில்..
“இது எனது முதல் படம் என்பதால், இசையை தனித்து நிற்கச் செய்ய வேண்டி, என் முழு உழைப்பையும் தந்து வருகிறேன். ரெட் ஃபிளவர் எதிர்காலத்தில் நடக்கும் கதை, எனவே சயின்ஸ் பிக்சனுக்கு ஏற்றவாறான புதுமையான ஆர்கெஸ்ட்ரா இசையை நவீன வகையில் உருவாக்க , ஹங்கேரிய இசைக்குழுவுடன் இணைந்து உருவாக்கி வருகிறேன்.

இயக்குநர் ஆண்ட்ரூ பாண்டியன் கூறுகையில்… ”
இந்தப் படத்தின் பின்னணி இசையில் புதுமையை தரும் நோக்கத்தில், ஒவ்வொரு பிரேமிலும் அதீத உழைப்பைத் தந்து வருகிறார். ரெட் ஃப்ளவருக்கு ஒரு தனித்துவமான ஒலியைக் கொண்டுவர அயராது உழைக்கிறார்,
ஹங்கேரிய இசைக்குழுவுடன் இணைந்து அவர் உருவாக்கும் இசை இந்திய இசைத்துறையில் மிகப்பெரும் அலைகளை உருவாக்கும். அவரது அர்ப்பணிப்பும் உழைப்பும் பிரமிக்க வைக்கிறது. கண்டிப்பாக பார்வையாளர்களிடம் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

ஸ்ரீ காளிகாம்பாள் பிக்சர்ஸ் சார்பில் கே மாணிக்கம் தயாரிப்பில், ஆண்ட்ரூ பாண்டியன் இயக்கத்தில், விக்னேஷ் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். படம் ஒரு எதிர்கால உலகில் நடப்பதாக அமைக்கப்பட்டுள்ளது, நம் இது வரலாற்று நிகழ்வுகளிலிருந்து எடுக்கப்பட்ட கதைக்கருவினை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது. தேவ சூர்யா ஒளிப்பதிவில் VFX இயக்குநர் பிரபாகரன் மேற்பார்வையில், VFX காட்சிகள் அற்புதமாக உருவாகி வருகிறது. கலரிஸ்ட் பிரான்சிஸ் சேவியரின் அற்புதமான வண்ணக்கோலத்தில் இப்படம் புது அனுபவம் தரும். மேலும் சந்தோஷ் ராம் இசை, ரசிகர்களை புதிய உலகிற்கு கூட்டிச்செல்லும்.இப்படத்தின் இசை இந்திய சினிமாவில் ஒரு அடையாளமாக மாறும்…

Related posts:

இந்திய சினிமாவிலும் சரி தமிழ் சினிமாவிலும் சரி கிரிக்கெட் சம்பந்தமா நிறைய படங்கள் வந்து இருக்கு அதில் பல படங்கள் வெற்றிய...

Her Beauty and Grace will sweep you off your feet! Meet #Abarnathi as Panchamadevi

தமிழ்நாடு , ஆந்திராவை தொடர்ந்து வட இந்திய மாநிலங்களில் கொண்டாடப்படும் தங்கலான்*

ஐகான் சினி கிரியேஷன்ஸ் எல்எல்பி வழங்கும் ஏபிஜி ஏழுமலை இயக்கத்தில் ‘மைனா’ புகழ் சேது நடித்திருக்கும் ‘மையல்’ திரைப்படம்!*

எனக்கு இப்படி இருப்பதுதான் மகிழ்ச்சி… திருமணம் குறித்து வெளிப்படையாக பேசிய ஓவியா…!!!

டெட்பூல் & வோல்வரின்' திரைப்படம் வெளியான ஒரே வாரத்தில் ரூ. 113.23 கோடி வசூலித்து பாக்ஸ் ஆபீஸில் மாஸ் காட்டியுள்ளது!*

விஜய் தேவாரகொண்டாவின் 'VD12' படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு*

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பான் இந்தியா திரைப்படமான கண்ணப்பா படத்திலிருந்து ரிபெல் ஸ்டார் பிரபாஸின் ருத்ரா