Thursday, January 15
Shadow

பிரபல திரைப்பட தயாரிப்பு நிறுவனமான பி.டி.ஜி யூனிவர்சல் ‘டிமாண்டி காலனி 2’, ‘சென்னை சிட்டி கேங்கஸ்டர்ஸ்’, ‘

பிரபல திரைப்பட தயாரிப்பு நிறுவனமான பி.டி.ஜி யூனிவர்சல் ‘டிமாண்டி காலனி 2’, ‘சென்னை சிட்டி கேங்கஸ்டர்ஸ்’, ‘ரெட்ட தல’ ஆகிய திரைப்படங்களை தயாரித்துள்ளது. பி.டி.ஜி யூனிவர்சலின் நிறுவனத் தலைவராக திரு. பாபி பாலசந்திரன் மற்றும் டாக்டர். மனோஜ் பெனோ இந்நிறுவனத்தின் ஹெட் ஆஃப் ஸ்ட்ரடஜியாகவும் பொறுப்பு வகிக்கிறார்கள். திரு. பாபி அவர்கள் படம் தயாரிப்பது மட்டுமல்லாமல், கோவையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் பி.டி.ஜி அறக்கட்டளை என்ற தொண்டு நிறுவனத்தை கடந்த 8 ஆண்டுகளாக திறன்பட நடத்தி வருகிறார். இந்நிறுவனம் பெண்கள் முன்னேற்றம், கல்வி மற்றும் கிராமப்புற வளர்ச்சியைக் குறிக்கோளாக கொண்டு கடந்த 8 வருடங்களாக செயல்பட்டு வருகிறது. தற்போது இதன் மூலம் திரைத்துறையில் பணிபுரியும் விளிம்புநிலை ஊழியர்களுக்கு பி.டி.ஜி அறக்கட்டளை மூலம் மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

இதன் மூலம் இன்று 09.02.2025 பி.டி.ஜி அறக்கட்டளை மற்றும் பி.டி.ஜி யூனிவர்சல் இணைந்து திரைத்துறையில் பணிப்புரியும் 277 தென்னிந்திய திரைப்பட மற்றும் சின்னத்திரை மகளிர் சங்க ஊழியர்களுக்கு அவர்களின் பணிநேரங்களில் பயன்படும் வகையில் அனைவருக்கும் ரெயின்கோட் வழங்கும் நிகழ்ச்சி சாலிகிராமத்தில் உள்ள மகளிர் ஊழியர்கள் சங்கம் கட்டிடத்தில் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத் தலைவர் திரு ஆர்.கே.செல்வமணி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. திரைத்துறை பணியாளர்களுக்கு அவர்களின் பணியில் புத்துணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தோடு இந்நிகழ்வு நடைபெற்றது.

 

Related posts:

நேசிப்பாயா’ படத்தின் இசை வெளியீட்டு விழா!

Her Beauty and Grace will sweep you off your feet! Meet #Abarnathi as Panchamadevi

ஒரே நாளில் இருமடங்கு அதிக திரைகள் - மர்மர் படத்திற்கு அமோக வரவேற்பு

Dawn Pictures தயாரிப்பில் ஆகாஷ் பாஸ்கரன் இயக்கும் “இதயம் முரளி” பட டைட்டில் மற்றும் டீசர் வெளியீட்டு விழா!!

100 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்த சீயான் விக்ரமின் 'தங்கலான் 'Chiyaan Vikram’s ‘Thangalaan’ joins 100Cr-Club!*

சரத்குமார், ஷிஜா ரோஸ், இனியா, ஸ்ரீகுமார், சுரேஷ்மேனன், நடராஜன், ராஜ்குமார், மலைராஜன் உள்ளிட்ட நடிகர்களின் நடிப்பில் ஷியா...

சசிகுமாரின் 'நந்தன்' படத்தை பாராட்டிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!*

விஜய் ஆண்டனியின் மீண்டும் மீண்டும் கம்பக் ஹிட்லர்” திரைப்பட முன் வெளியீட்டு விழா!!*