
பிரபல ஸ்டன்ட் மாஸ்டர் அனலரசு இயக்கத்துல விஜய் சேதுபதி மகன் சூர்யா நடிச்சிருக்குற பீனிக்ஸ் படத்தோட விமர்சனத்தை பாக்கலாம் வாங்க…
நடிகர் விஜய் சேதுபதி மகன் சூர்யா நடிச்சி அறிமுகமாகி இருக்கற படம்தான் பீனிக்ஸ்.. இந்த படத்தோட கதைய பத்தி பாத்தோம்னா…ஆளுங்கட்சி எம்எம்ஏவ பொதுஇடத்துல வெச்சு சராசரியா வெட்டி கொல்றாரு ஹரோ சூர்யா.. ஆனா அவரு மைனர் அப்படிங்கறதுனால சிறார் ஜெயில்ல போடுறாங்க.. எம்எல்ஏ இறந்ததுல கோபமா இருக்கற எம்எல்ஏ மனைவி வரலட்சுமி மற்றும் அவங்களோட ஆளுங்க சூர்யாவா ஜெயில்லயே கொலை செய்ய முயற்சி செய்யறாங்க.. இதுல இருந்து சூர்யா சப்பிச்சாரா? எதுக்காக எம்எல்ஏவ கொலை பண்ணுனாரு.. அப்படிங்கறதுதான் படம்..
இயக்குனர் அனலரசு ஸ்டன்ட் மாஸ்டர் அப்படிங்கறதால அதுக்கு தகுந்த மாதிரியான கதையை தேர்வு செஞ்சு எடுத்துருக்காரு.. சண்டைக் காட்சிகள் எல்லாமே அவ்ளோ நல்லா வந்திருக்கு.. ஹீரோ சூர்யா தன்னோட முதல் படத்துலயே அருமையான நடிப்பை கொடுத்திருக்காரு.. சண்டை காட்சிகள்ல மெனக்கெட்டு நல்லாவே நடிச்சிருக்காரு.. படத்துல அவருக்குன்னு ஜோடின்னு யாருமில்ல.. கதைக்கு என்ன தேவையோ அதை பண்ணியிருக்காரு.. ஜெயில்ல நடக்குற ஃபைட் எல்லாம் சூர்யாவுக்கு மாஸ் ஏத்துற விதமா இருக்கு..முதல் பாதி முழுக்க இரண்டே சீன்தான் ஆனா போரடிக்காம போகுது..பாக்ஸிங் பிளேயர் அப்படிங்கிறதுக்கு ஏற்ற உடலமைப்பும் இருக்கு.. கஷ்டப்பட்டு நடிச்சிருக்காருன்னே சொல்லலாம்..
இரண்டாம் பாதியில பிளாஷ்பேக்.. ஏற்றுக்கொள்ளும் வகையில இருக்கு.. ஏழை மாணவர்களோட திறமையை எப்படி அரசியல்வாதிங்க ஏமாத்தி பறிச்சிக்குறாங்க அப்படிங்கறத பரபர ஆக்ஷன் படமா கொடுத்திருக்காரு இயக்குனர்.. சாம் சி எஸ்ஓட பின்னணி இசை படத்துக்கு ரொம்பவும் பலமா இருக்கு.. ஒளிப்பதிவும் நல்லா இருக்கு.. தேவதர்ஷினி, அபி நக்ஷத்திரா, சம்பத் என படத்துல நடிச்ச எல்லாருமே நல்லா நடிச்சிருக்காங்க..
வழக்கமான கதைதான் அப்படின்னாலும் போரடிக்காம போகுது.. மொத்தத்துல தன்னோட முதல் படத்துலேயே முத்திரை பதிச்சிருக்காரு சூர்யா சேதுபதி…