
பேரன்பும் பெருங்கோவம் – திரைவிமர்சனம்
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் தங்கர்பச்சான் இவர் இயக்கிய படங்கள் அனைத்தும் வாழ்வியலை சொல்லும் படமாக அமைந்தது. அப்படி பட்ட இயக்குனரின் மகன் விஜித் பச்சான் இந்த பேரன்பும் பெருங்கோவம் படத்தில் நாயகனாக நடித்து இருக்கிறார்.அதோடு தங்கர்பச்சான் உதவி இயக்குநர் சிவபிரகாஷ் தான் இந்த படத்தை இயக்கியுள்ளார்.
இந்த படத்தில் விஜித் பச்சான் ,மைம் கோபி அருள்தாஸ், தீபா,சாலி நிவேகாஷ், கீதா கைலாசம் ,சுபத்ரா ராபர்ட் மற்றும் பலர் நடிப்பில் இளையராஜா இசையில் சிவபிரகாஷ் இயக்கத்தில் வெளிவந்து இருக்கும் படம் தான் பேரன்பும் பெருங்கோவம் .
கதைக்குள் போகலாம்:
தேனி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் ஊர் தலைவர் அதோடு சாதி கட்சியின் மந்திரியுமான மைம் கோபி பிடியில் சாதி வெறிப்பிடியில் ஊர் மக்கள் மாட்டி தவிக்கின்றனர். கலப்பு திருமணம் செய்தால் உடனடியாக அவர்களை கொலை செய்வது வழக்கமாக வைத்துள்ளனர்.இதை எதிர்க்கும் நாயகன் ஜீவா இதனால் அவரின் மனைவியும் குழந்தையும் பாதிக்க படுகிறார்கள். இதற்காக அந்த மந்திரி மற்றும் அவரின் சாதி கட்சி ஆட்களையும் எப்படி பழிவாங்குகிறார் என்பது தான் மீதிகதை
இயக்குனர் சிவபிரகாஷ் இந்த கதையை எப்படி தேர்ந்தெடுத்தார் என்பது மிக பெரிய கேள்வி குறி.இன்றைய காலகட்டத்தில் இப்படி எல்லாம் நடக்குமா என்று நினைத்து கூட பார்க்க முடியவில்லை தொடர்ந்து கொலை செய்யும் சாதி வெறியினர் என்ன தான் மந்திரியாக இருந்தாலும் சட்டம் எல்லாம் சும்மாவா இருக்கிறது. மிக பழமையான கதை களம் அதோடு நம்பமுடியாத காட்சிகள். ஆகவே படத்தோடு நம்மை நம்மளால் இணைத்து கொள்ள முடியவில்லை. இவர் உண்மையிலே தங்கர்பச்சான் உதவி இயக்குநரா என்று கேள்வி எழுகிறது.
அடுத்து நாயகனாக நடித்து இருக்கும் விஜித் பச்சான் படத்தின் அடுத்த உச்சகட்டம் ஒரு நடிகனுக்கு அழகு இருக்கணும் இல்லை திறமை இருக்கணும் இப்படி எதுவுமே இல்லாத ஒரு ஆளை நாயகன் என்று இயக்குனர் எப்படி தேர்ந்தெடுத்தார் என்று தெரியவில்லை.
படத்தின் ஆறுதல் நாயகி சாலி நிவேகாஷ் படத்தில் ரசிக்கும் படியாக உள்ளார். தனக்கு கொடுத்த வேலையை மிக நிறைவாக செய்துள்ளார் என்று சொல்லலாம்.
படத்தின் அடுத்த ஆறுதல் இசைஞானி இளையராஜா இசை நம்மை ஆறுதல் கொடுக்கிறது.
மொத்ததில் பேரன்பும் பெருங்கோவம் வெறும் கோவம்