Wednesday, October 22
Shadow

மாயக்கூத்து திரைவிமர்சனம்

மாயக்கூத்து முற்றிலும் புது முகங்களை நடிகர்கள் மட்டுமல்ல தொழில்நுட்ப கலைஞர்களும் புதிய அவர்களே இவர்கள் அனைவர்களும் யாரிடமும் உதவி இயக்குனர் ஆகவோ இல்லை உதவி ஒளிப்பதிவாளர் பணிபுரியவில்லை நேரடியாக இந்த படத்தை கிட்டதட்ட 10 வருடங்களாக முயற்சி செய்து இந்த படத்தை கொடுத்திருக்கிறார்கள் இது என்ன படம் தெரியுமா மாயக்கூத்து தமிழ் சினிமாக்கு ஒரு முத்தாப்பு என்று சொல்லலாம் குறிஞ்சி பூ போல ஒரு அற்புதமான கதையை திரைக்கதையோடு நம்மளை பிரமிக்க வைத்திருக்கிறார்.

இந்தப் படத்தில் நடிகர்கள்:
நாகராஜன் கண்ணன்,
டெல்லி கணேஷ், மு. ராமசாமி,எஸ்.கே. இந்து
சாய் தீனா, ஐஸ்வர்யா ரகுபதி,மற்றும் பலர் நடிப்பில் எழுதி இயக்கி இருப்பவர் ஏ.ஆர். ராகவேந்திரா, ஒளிப்பதிவு: சுந்தர் ராம் கிருஷ்ணன் இசை அஞ்சனா ராஜகோபாலன் இவர்களின் கூட்டணியில் வெளிவந்து இருக்கும் படம்

எழுத்தாளர் வாசன் அவர் எழுதும் கதாபாத்திரங்கள் அனைத்தும் மிக வாழ்க்கையில் அவரை பாதிக்க வைக்கிறது. இந்த பாதிப்பு அவரின் வாழ்க்கையில் ஏற்படும் சிரமங்களையும் அதிலிருந்து அவர் எப்படி விடுபடுகிறார் என்பதுதான் இந்த படத்தின் கதை.

வித்தியாசமான கதைக்களம் அற்புதமான திரைக்கதை எதிர்பாராத திருப்பங்கள் படத்திற்கு ஏற்ற கதாபாத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் புது முகங்கள் இவர்கள் அனைவரும் மிகவும் அனுபவசாலிகளை போலவே நடித்து இருக்கிறார்கள் கதாபாத்திரத் தேர்வுகளுக்காகவே இயக்குனருக்கு மிகப்பெரிய பாராட்டை தெரிவிக்கலாம் இயக்குனர் ஒவ்வொரு காட்சியையும் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் மிக நேர்த்தியாகவும் மிகவும் ரசித்து அனுபவித்து எழுதி இருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். இந்த படம் அனைவராலும் பாராட்ட வேண்டிய ஒரு படம் அனைவரும் கொண்டாட வேண்டிய ஒரு படம் ஆனால் சிறிய படங்களுக்கு என்றுமே மக்களிடமும் சரி வர்த்தக ரீதியாகவும் வரவேற்பு கிடைப்பது மிக சிரமம் அதை உழைக்கும் அளவுக்கு இந்தப் படத்திற்கு நாம் ஆதரவு கொடுக்க வேண்டும்.
எழுத்தாளர் வாசன் கதாபாத்திரமாக நடித்திருக்கும் நாகராஜக்கண்ணன் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இரக்கிறார். எழுத்தாளர் ஒரு இறைவனுக்கு சமம் என்று ஆணவமாக பேசும் சமயத்தில் அதேபோல அவர் கற்பனை கதாபாத்திரங்களை நடுவே சிக்கி தவிர்க்கும் போதும் மிக நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

சாய் தீனா ஐஸ்வர்யா மூ ராமசாமி இவர்கள் நடிப்பு படத்திற்கு மிகப்பெரிய பலம் என்று கூட சொல்லலாம் படத்தில் நடித்த அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் தன் பங்கை உணர்ந்து செயல்படுத்தி உள்ளனர் குறிப்பாக இசையமைப்பாளர் பெண் இசையமைப்பாளர் தன் முதல் படத்தில் முத்திரை பதித்திருக்கிறார் கதைக்கு என்ன தேவையோ அதை மிக அற்புதமாக கொடுத்திருக்கிறார் படத்தில் ஐந்து பாடல்கள் அந்த ஐந்து பாடல்களும் புதுமையாகவும் இனிமையாகவும் உள்ளது.

மாயக்கூத்து மொத்தத்தில் தமிழ் சினிமாக்கு இது ஒரு மரகதம்
அனைவரும் கொண்டாடப்பட வேண்டிய படம் இந்த படத்திற்கு அனைவரும் ஆதரவு கொடுத்து மிகப்பெரிய வெற்றிப்படமாக ஆக்கினால் தமிழ் சினிமாவில் நல்ல படங்கள் தொடர்ந்து வெளியாகும் என்பதில் ஐயமில்லை.