Friday, April 17
Shadow

மிடில் கிளாஸ் திரைவிமர்சனம்

மிடில் கிளாஸ்.. சென்னையில மிடில் கிளாஸ் குடும்பம்‌ நடத்திட்டு இருக்காரு முனீஸ்காந்ந். அவரோட மனைவி விஜயலட்சுமிக்கு எப்படியாவது சொந்த வீடு வாங்கணும் அப்படிங்கறது நீண்ட நாள் கனவு.. ஆனா முனிஷ்காந்துக்கோ மனசு முழுக்க சொந்த ஊர்ல விவசாயம் பண்ணி செட்டில் ஆக வேண்டும் அப்படின்னு ஆசை.. நம்ம வாழ்க்கையில எதாவது அதிசயம் நிகழாதா அப்படின்னு இருக்கற இந்த குடும்பத்துக்கு ஒரு அதிர்ஷ்டம் அடிக்குது.. ஆனா அதுல ஒரு சிக்கல் வருது.. அந்த சிக்கல சமாளிச்சு அவங்க வாழ்க்கையில ஜெயிச்சாங்களா அப்படிங்கறதுதான் கதை..

 

முனீஸ்காந்த் ஒரு நடுத்தர குடும்ப தலைவனா இயல்பான நடிப்ப கொடுத்திருக்காரு.. நடுத்தர குடும்பஸ்தனோட உடல்மொழிய கச்சிதமா கொண்டுவந்து ரசிக்க வெச்சிருக்காரு.. எமோஷனல் சீன்ஸ்ல கண்கலங்கவும் வெச்சிருக்காரு.. மாநகரம் படத்தோட கிளைமேக்ஸ்ல எப்படி ஒரு அற்புதமான நடிப்ப கொடுத்திருந்தாரே அதேபோல ஒரு நடிப்ப இந்த படத்தோட கிளைமேக்ஸ்லயும் கொடுத்துருக்காரு. மனைவியா நடிச்சிருக்கற விஜயலட்சுமி நடுத்தர குடும்பத்தலைவிய கண்முன்னே காட்டியிருக்காங்க.. எதை எல்லாம் செஞ்சா சம்பாதிக்க முடியும் அப்படிங்கறத புரிஞ்சுகிட்டு எல்லாத்தையும் செஞ்சு பாக்குற கேரக்டர்.. எப்படியாச்சும் நம்ம கடன் தீர்ந்திடனும், குழந்தைங்க எதிர்காலம் நல்லா இருக்கனும் அப்படின்னு நினைக்குற கதாபாத்திரத்த சிறப்பா செஞ்சிருக்காங்க. ராதாரவி, காளி வெங்கட், குரேஷி, கோடங்கி வடிவேலு, வேல ராமமூர்த்தி என அத்தனை துணை கதாபாத்திரங்களும் படத்துக்கு உறுதுணையா இருந்திருக்காங்க..

 

சுதர்சன் சீனிவாசனோட ஒளிப்பதிவு கண்களை உறுத்தாமல் காட்சிபடுத்தியிருக்கு.. ஆரம்பத்துலயும் இறுதியிலயும் வர்ற அந்த ஏரியல் ஷாட் அருமை. பிரனவ் முனிராஜ் இசையில பாடல்களும் பின்னணி இசையும் நல்லா இருக்கு..

 

ஒரு நடுத்தர குடும்பங்களோட மனநிலையையும், வாழ்க்கையையும் தன்னோட சிறப்பான எழுத்து மூலம் திரையில காட்சிப் படுத்தி ரசிக்க வெச்சிருக்காரு இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம்.. கலகலப்பான முதல் பாதி கவர்கிறது.. வழக்கமான படங்களுக்கு ஏற்பட்ட அதே பிரச்சினை தான் இந்த படத்துக்கும், இரண்டாம் பாதி சற்று தொய்வ ஏற்படுத்துனாலும் சுவாரஸ்யமான கிளைமாக்ஸ் காட்சி மனநிறைவு கொடுக்குது..

 

நம் நலன் மட்டும் பார்த்து சுயநலமா வாழாம, பிறர் நலம் மீதும் கொஞ்சம் அக்கறை செலுத்தி கொஞ்சம் மனிதத்துடனும், அறத்துடனும் வாழ வேண்டும் அப்படிங்கிறத சொல்லியிருக்காரு இயக்குனர்.. மொத்தத்துல மிடில் கிளாஸ்.. மனதளவில் கோடீஸ்வரன்..