Friday, October 24
Shadow

மெட்ராஸ் மேட்னி – thiraivimarsanam

மெட்ராஸ் மேட்னி – thiraivimarsanam

பொதுமக்களின் எதார்த்த வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘மெட்ராஸ் மேட்னி’ திரைப்படம், அதன் நேர்த்தியான கதை சொல்லல் மற்றும் கதாபாத்திரங்களின் இயல்பான ஆக்கங்களால் பார்வையாளர்களை ஆழமாகத் தொட்டுச் செல்லக்கூடிய படம்.

 

நாயகனாக நடித்த காளி வெங்கட், தனது இயல்பான நடிப்பின் மூலம் ‘கண்ணன்’ என்ற பாத்திரத்தை நம் மனதில் உறையாக பதிய செய்கிறார். அவரின் குடும்பம் முழுவதும் கதையின் உணர்வுப் பிழம்பாகச் செயல்படுகிறது.

 

சத்யராஜ் தன்னுடைய திரைஅழுத்தத்துடன் கதையின் கருவை சுமந்த ஒரு முக்கிய பாத்திரத்தில் தனக்கென ஒரு இடத்தை உருவாக்குகிறார். அவரின் நடிப்பு, கதையின் உருமாற்றத்திற்கு தளமாக அமைகிறது.

 

ரோஷினி ஹரிப்பிரியன், அப்பாவை விட்டுக் கொடுக்காத மகளாக கலக்குகிறார்; ஷெல்லி கிஷோர் மனைவியாக கதைக்குத் தேவையான மெல்லிய உணர்வுகளைப் பரிமாறுகிறார்.

 

தொலைக்காட்சிகளில் பெரும்பாலும் அழுகாச்சி அம்மாவாக அறிமுகமான கீதா கைலாசம், இங்கு வித்தியாசமாக சிரிப்பும் சினிமாவில் மிக அரிதாக காணப்படும் மகிழ்ச்சியான அம்மா கேரக்டராக கலக்குகிறார். அவரின் வாக்குவாதம் மற்றும் கரிசனமும் தனி சிறப்பாக அமைந்துள்ளது.

 

மற்ற துணை நடிகர்களாக கிஷோர், அர்ச்சனா, சுனில் சுகதா, சாம்ஸ், ஜாங்கிரி மதுமிதா ஆகியோர் தங்கள் கதாபாத்திரங்களில் சிறப்பாகப் பதிய செய்கிறார்கள். ஒவ்வொருவரும் கதைக்குத் தேவையான ஒவ்வொரு பிம்பமாகவும் திகழ்கிறார்கள்.

 

ஒளிப்பதிவாளர் ஆனந்த்.ஜி.கே எளிமையான மக்களின் வாழ்க்கை சூழலையும், அவர்களின் இயற்கையான வாழ்விடங்களையும் மிக நுணுக்கமாகப் படம் பிடித்திருக்கிறார். ஒவ்வொரு ஷாடும் காட்சியின் உணர்வை ஊட்டி தருகிறது.

 

இசையமைப்பாளர் கே.சி.பாலசாரங்கனின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை, திரைக்கதையின் மெதுவான போக்கை பின்பற்றி மனதுக்கு நெருக்கமான அனுபவத்தை அளிக்கின்றன.

 

படத்தொகுப்பாளர் சதீஷ்குமார் சமுஷ்கி, திரையிலுள்ள அனுபவத்தை உயிர்ப்புடன் கொண்டுவருகிறார். சில இடங்களில் தொகுப்பில் சற்று தொய்வு ஏற்படும் போதிலும், அதன் மேல் இயக்குநரின் கதை சொல்லும் திறமை மறைக்கச் செய்கிறது.

 

இயக்குநராக கார்த்திகேயன் மணி, சாதாரண மக்களின் வாழ்க்கையை உன்னிப்பாகப் பதிவு செய்து, அவர்களின் வெறும் வாழ்வைச் சாகசமாகவே காட்ட முயற்சித்துள்ளார். நவீன மற்றும் உணர்ச்சிபூர்வமான கதை சொல்லல் இந்த படத்தின் முக்கிய பலமாக இருக்கிறது.

 

மெதுவாக நகரும் திரைக்கதையே இந்த படத்தின் குறைபாடாக இருந்தாலும், நம்மை கதையோடும் கதாபாத்திரங்களோடும் பயணிக்க வைக்கும் இயக்கம், இந்த குறையை மறைக்கிறது.

 

மொத்தத்தில், ‘மெட்ராஸ் மேட்னி’ என்பது எளிய மக்களின் வாழ்வியல் உணர்வுகளை நெஞ்சை நனைக்கும் விதத்தில் அழகாக சொல்லும் படம்.