Friday, October 24
Shadow

வரலாற்று நிகழ்வாக இசைஞானி இளையராஜா இசையில் ‘திருக்குறள்’ திரைப்படம்

வரலாற்று நிகழ்வாக
இசைஞானி இளையராஜா இசையில்
‘திருக்குறள்’ திரைப்படம்

” திருக்குறள் ” படத்திற்கு பாடல்கள் எழுதி இசையமைக்கும் இசைஞானி இளையராஜா.

பெருந்தலைவர் காமராஜர் வாழ்க்கை வரலாற்றை ‘காமராஜ்’ என்ற பெயரில் திரைப்படமாகத் தயாரித்த ‘ரமணா கம்யூனிகேஷன்ஸ்’ நிறுவனம், தற்போது மிகப் பிரம்மாண்டமாகத் ‘திருக்குறள்’ என்ற திரைப்படத்தைத் தயாரித்துள்ளது.

அறம் சார் வாழ்வியலை மானுடர்க்கு போதிப்பதில் உலகில் முன்னிலை வகிக்கும் நூல் திருக்குறள். திருக்குறளின் முப்பாலை மையக் கருவாகக் கொண்டு, இப்படத்திற்கான திரைக்கதை எழுதப்பட்டுள்ளது.
படைப்பினூடாக படைப்பாளியைக் கண்டடையும் முயற்சியில் திருவள்ளுவரும் இப்படத்தில் ஒரு பாத்திரமாக வருகிறார். கூடவே வாசுகியும், அதோடு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழரின் வாழ்வியலும் இத்திரைப்படத்தில் முக்கிய அங்கம் வகிக்கிறது.

காதலோடு, வீரமும் தமிழர் வாழ்வில் பிரிக்க முடியாத ஒன்றாகும். அன்றைய தமிழரின் வீரத்தைப் பறைசாற்றும் போர்க்களக் காட்சிகளும் மிகுந்த பொருட்செலவில் படமாக்கப்பட்டுள்ளன.

இத்திரைப்படத்தைப் பார்த்த இசைஞானி இளையராஜா, உடனடியாக இசையமைக்க இசைவு தெரிவித்தார். அத்துடன் இப்படத்திற்காக, சங்க இலக்கியச் சொற்களோடு, கவித்துவமும், பொருட்செறிவும் மிக்க இரு பாடல்களையும் எழுதியுள்ளார்.
முத்தமிழில், முதல் தமிழுக்கான உயரிய படைப்பிற்கு, இரண்டாம் தமிழின் அரியணையில் வீற்றிருக்கும் இசைஞானி இசையமைப்பது, இத்தனை ஆண்டுகால தமிழுக்கான வரலாற்றில் ஒரு அற்புத நிகழ்வாகும்.

ஜி.யூ.போப் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த பின்பு தான், திருக்குறள் உலக அளவில் அறிஞர்களின் கவனத்தை ஈர்த்தது. அதுபோல் இந்நிகழ்விற்குப் பின் சர்வதேச அளவில் உலக மக்களின் கவனத்தையும் நிச்சயம் இந்த திருக்குறள் படம் ஈர்க்கும்.

இப்படத்தில் வள்ளுவராக கலைச்சோழன், வாசுகியாக தனலட்சுமி, பாண்டிய மன்னனாக ஓ.ஏ.கே.சுந்தர், நக்கீரராக இயக்குநர் சுப்ரமணிய சிவா, புலவர் பெருந்தலைச்சாத்தனாக கொட்டாச்சி ஆகியோரோடு, குணாபாபு, பாடினி குமார் மற்றும் முக்கிய நடிக, நடிகையர் பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் கலை இயக்குநராக சுரேஷ் கலேரியும், ஆடைவடிவமைப்பாளராக சுரேஷ் குமாரும் பணியாற்றியுள்ளனர். செம்பூர்.கே.ஜெயராஜ் கதை, திரைக்கதை, வசனம் எழுத எட்வின் சகாய் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இத்திருப்பணியில் மதுரை டி.பி.ராஜேந்திரன் முதன்மைப் பங்களிப்புச் செய்துள்ளார். வி.ஐ.டி.வேந்தர் கோ.விஸ்வநாதன் தலைமையிலான தமிழியக்கமும் இப்பணியில் இணைந்துள்ளது. ரமணா கம்யூனிகேஷன்ஸ் இத்திரைப்படத்தைத் தயாரித்துள்ளது.

காமராஜ் படத்தை இயக்கிய ஏ.ஜெ.பாலகிருஷ்ணன் இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தி தொடர்பு :

 


புவன் செல்வராஜ்.

Related posts:

நடிகர் சூர்யா நடிப்பில், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் “ரெட்ரோ

குபேரா' இசை வெளியீடானது நட்சத்திரங்கள் நிறைந்த இரவாக அரங்கத்தை ஒளிரச் செய்தது

Artificial intelligence really close to replacing artists?

நடிகர் கிருஷ்ணா நடிக்கும் 23 வது படத்தின் துவக்க விழா.

நடிகர் அஜித்குமாரின் ’விடாமுயற்சி’ படத்தில் இருந்து கணேஷ் & தஸ்ரதி கதாபாத்திரங்களுக்கான அறிமுக போஸ்டர் வெளியாகியுள்ளது!*

சித்தார்த் நடிக்கும் “மிஸ் யூ” படத்திற்காக சித்தார்த் பாடிய “நீ என்ன பாத்தியே” பாடல் ; கல்லூரி மாணவர்கள் முன்னிலையில் பா...

ஏபிஜே அப்துல் கலாம் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிக்கும் தனுஷ்

35 ஆண்டுக்கு பிறகு தமிழில் வெளியாகும் சாமி படம் “ராகு கேது