
சித்தர் வழி, ரசாயன ஊசி….. விஜய் ஆண்டனியின் மார்கன் – திரை விமர்சனம்
நடிகர் விஜய் ஆண்டனியின் நடிப்பில் உருவான மார்கன் திரைப்படம் இன்று திரையரங்கில் வெளியாகியுள்ளது.
சென்னையில் ஒரு இளம் பெண் வித்தியாசமான முறையில் வில்லனால் கொல்லப்படுகிறார். வித்தியாசம் என்றால் ஒரு ஊசியை அப்பெண் மீது செலுத்தியதும் சில நொடிகளிலேயே உடல் முழுவதும் கருப்பாகி மரணம் நிகழ்கிறது. இந்த கொலை சம்பவத்தை காவல் துறை விசாரிக்கும் போது இதேபோல் ஒரு வழக்கை எதிர்கொண்ட காவல்துறை அதிகாரியான துருவுக்கு விஜய் ஆண்டனி தகவல் செல்கிறது. உடனடியாக இந்த வழக்கை அவர் கையிலெடுக்கிறார்.
கொலையான அன்றி ஒரு இளைஞர் சிசிடிவி கேமராவில் பதிவாக, அவரை தேடி விஜய் ஆண்டனி செல்கிறார். அந்த கதாபாத்திரத்தில் விஜய் ஆண்டனியின் உறவினரான அஜய் திஷன் நடித்திருக்கிறார். அந்த இளைஞருக்கு இக்கொலைக்கும் தொடர்பு இருக்கிறதா என விசாரணையை ஆரம்பிக்கும் விஜய் ஆண்டனி சில திருப்பங்களை சந்திக்கிறார். இறுதியில் கொலையாளி யார். வித்தியாசமான முறையில் உடலை கருப்பாகி செல்வதற்கான காரணம் என்ன என்கிற மீத கதையே மார்கன்
