Friday, October 17
Shadow

வில்- திரை விமர்சனம்

வில்- திரை விமர்சனம்

சோனியா அகர்வால், விக்ராந்த் மற்றும் பலர் நடித்துள்ள இத் திரைப்படத்தை எஸ். சிவராமன் இயக்கியுள்ளார் இந்த படத்துக்கு ஒளிப்பதிவு- டி. எஸ் பிரசன்னா.இசை – சௌரப் அகர்வால் ,படத்தொகுப்பு G. தினேஷ்.

மறைந்த தொழிலதிபர் ஒருவர் தன்னுடைய மகன்களுக்கு சொத்துக்களை எழுதியது போக சென்னையில் மீதம் இருக்கும் ஒரு பிளாட்டை ஒரு பெண்ணுக்கு எழுதி வைக்கிறார், அந்தப் பெண் யார் என்றே தெரியாத தொழிலதிபரின் வாரிசுகள், வேறு ஒரு பெண்ணை காண்பித்து அந்த பிளாட்டை கைப்பற்றி விடலாம் என்று திட்டமிடுகிறார்கள், இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது, இந்த வழக்கினை சோனியா அகர்வால் நீதிபதியாக இருந்து விசாரிக்கிறார் ,அந்த பிளாட்டை சொந்தம் கொண்டாடி வரும் பெண் மீது சோனியா அகர்வாலுக்கு சந்தேகம் எழுவதால் ,காவல்துறை அதிகாரியாக இருக்கும் விக்ராந்தை அழைத்து உண்மையான அந்தப் பெண் யார் ?என்பதை கண்டுபிடித்து தரும்படி சொல்லுகிறார், அதன்படியே உண்மையிலேயே அந்த அடுக்குமாடி குடியிருப்பு சொந்தக்காரப் பெண் யார் என்பதை விக்ராந்த் தேடிச் செல்கிறார் ?இறுதியில் என்ன நடந்தது ?உண்மையில் அந்த பிளாட்டுக்கு சொந்தமான பெண்ணை விக்ராந்தால் கண்டுபிடிக்க முடிந்ததா? இதன் பின்புலம் என்ன என்பதே படத்தின் மீதி கதை.

நீதிபதி வேடத்தில் சோனியா அகர்வால் நடித்துள்ளார், போலீஸ் அதிகாரியாக விக்ராந்த் நடித்துள்ளார். இருவரும் தங்களுடைய கதாபாத்திரத்திற்கு ஏற்ற வகையில் நன்கு நடித்துள்ளார்கள் மற்றும் ஷ்ரத்தா என்னும் மைய கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ள அலக்கியா ,மோகன்ராமன் பிர்லா போஸ் ,பதம் வேணு குமார்,போஸ் வெங்கட் போன்றவர்களும் அவரவர்கள் கதாபாத்திரங்களில் குறைவில்லாமல் நடித்துள்ளார்கள்

ஒளிப்பதிவாளர் டி எஸ் பிரசன்னாவின் ஒளியமைப்புகளும்,சௌரப் அகர்வாலின் பின்னணி இசையும் ,தினேஷின் படத்தொகுப்பும் இயக்குனரின் கதையோட்டத்துக்கு மிகவும் உறுதுணையாக அமைந்துள்ளது .பாடல்களைப் பொருத்தமட்டில் இன்னமும் கவனம் செலுத்தி இருக்கலாம் என்று தோன்றுகிறது.

கிரைம் திரில்லர் பாணியிலான திரைப்படத்தை இயக்குனர் எஸ். சிவராமன் உருவாக்கியுள்ளார்,திரைக்கதையில் இன்னமும் விறுவிறுப்பையும் ,வேகத்தையும் கூட்டி இருந்தால் அது படத்திற்கு மேலும் சுவாரசியத்தை கூட்டியிருக்கும் .மற்றபடி பொழுதுபோக்குக்காக படம் பார்க்கும் ரசிகர்களுக்கு இந்த படம் ஏமாற்றத்தை தராது.