Friday, October 24
Shadow

ஹரிஷ் கல்யாணின் ‘டீசல்’ படத்தை தனது இசையால் நிரப்பி மைலேஜ் ஏற்றியிருக்கும் இசையமைப்பாளர் திபு நினன் தாமஸ்!

ஹரிஷ் கல்யாணின் ‘டீசல்’ படத்தை தனது இசையால் நிரப்பி மைலேஜ் ஏற்றியிருக்கும் இசையமைப்பாளர் திபு நினன் தாமஸ்!

இசையமைப்பாளர் திபு நினன் தாமஸ், தனது சிறந்த இசையமைப்பால் இந்திய இசைத்துறையில் தனக்கென தனி இடத்தைப் பிடித்திருக்கிறார். கடந்த ஐந்து வருடங்களில் வெளியான படங்களில் ‘கனா’, ‘பேச்சுலர்’ படத்தின் ‘அடியே’ பாடல், சித்தார்த்தின் ‘சித்தா’ என அடுத்தடுத்து இவர் இசையமைப்பில் வெளியான படங்கள் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. அதுமட்டுமல்லாது, 2024 ஆம் ஆண்டில் மலையாளத் திரையுலகில் அதிக வசூல் செய்த படங்களில் நடிகர் டொவினோ தாமஸ் கதாநாயகனாக நடித்த ‘ARM’ மலையாளப் படத்திற்கும் அவர்தான் இசையமைத்தார். அவர் மெல்லிசைகளில் தான் அதிகம் கவனம் செலுத்துவார் என்ற எண்ணத்தை உடைத்து, ‘டீசல்’ படத்தில் கானா ஸ்டைலில் ‘பீர் சாங்’ மூலம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார்.

‘பார்க்கிங்’, ‘லப்பர் பந்து’ என தனது அடுத்தடுத்த ஹிட் படங்கள் மூலம் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத முன்னணி நடிகர்களில் ஒருவராக ஹரிஷ் கல்யாண் உள்ளார்.

அவரது ‘டீசல்’ படத்தின் மீது ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பில் உள்ளனர். ஹரிஷ் கல்யாண் கரியரில் அதிக பட்ஜெட்டில் உருவான படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

‘டீசல்’ படத்தில் ஹரிஷ் கல்யாண், அதுல்யா ரவி, வினய், சாய் குமார், அனன்யா, கருணாஸ், விவேக் பிரசன்னா, சச்சின் கேதேகர், ஜாகீர் உசேன், தங்கதுரை, கேபிஒய் தீனா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப குழு:

பேனர்: தேர்ட் ஐ எண்டர்டெயின்மெண்ட்,
தயாரிப்பு: எஸ்பிசினிமாஸ்,
தயாரிப்பு: தேவராஜுலு மார்க்கண்டேயன்,
எழுத்து, இயக்கம்: சண்முகம் முத்துசாமி,
இசை: திபு நினன் தாமஸ்,
ஒளிப்பதிவாளர்: ரிச்சர்ட் எம்.நாதன் & எம்.எஸ்.பிரபு,
ஆக்‌ஷன்: ஸ்டண்ட் செல்வா & ராஜசேகர்,
எடிட்டர்: சான் லோகேஷ்,
கலை இயக்கம்: ரெம்பன் பால்ராஜ்,
நடன இயக்குனர்: ராஜுசுந்தரம், ஷோபி, ஷெரீப்,
மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா, அப்துல் ஏ நாசர்

Related posts:

இயக்குநர் ராம் கோபால் வர்மாவின் ‘சாரி’ திரைப்படத்தின் டிரெய்லர் முத்திரை பதிக்கிறது!

நடிகர் அர்ஜுன் தாஸ் உம் அதிதி ஷங்கர்உம் சேரிந்து love ஜோடி யாக நடிக்கும்புதிய படத்தின் டைட்டிலுக்கான டீசர் வெளியீடு

ஜியாவின் "அவன் இவள்" பர்ஸ்ட் லுக் வெளியானது

விறுவிறுப்பான கதைக்களத்தில் விருந்து,* *மீண்டும் ஆக்சன் கிங் அவதாரம்*

சிறுவயதில் நடந்த அவமானத்தை மனதில் வைத்துக்கொண்டு பெரியவனான பிறகு

தமிழ்நாடு , ஆந்திராவை தொடர்ந்து வட இந்திய மாநிலங்களில் கொண்டாடப்படும் தங்கலான்*

விக்ரம் பிரபு நடிக்கும் 'லவ் மேரேஜ்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீட

தமிழ் சினிமா மேதைகளைக் கொண்டாட வேண்டும்: இயக்குநர் வசந்த பாலன் பேச்சு!