
ஸ்ரீகணேஷ் இயக்கத்துல சித்தார்த், சரத்குமார், தேவயானி உள்ளிட்டவங்க நடிச்சிருக்கற 3bhk படத்தோட விமர்சனத்தை பாக்கலாம்
எட்டு தோட்டாக்கள், குருதி ஆட்டம் படங்களை இயக்கிய ஸ்ரீகணேஷ் இயக்கத்துல சித்தார்த், சரத்குமார், தேவயானி நடிச்சிருக்கற படம்தான் 3bhk.. இந்த படத்தோட கதை என்னன்னா?.. சரத்குமார் தனது மனைவி தேவயானி, மகன் சித்தார்த் , மகள் மீத்தா ரகுநாத் உடன் வாடகை வீட்டில் வாழ்ந்து வருகிறார்.. அடிக்கடி வீடு மாறுவதால் ஒரு சொந்த வீடு வாங்க வேண்டும் என்று நினைக்கின்றனர்.. இறுதியில் வீடு வாங்கினார்களா? இல்லையா? அதற்கான போராட்டமே இந்தப் படம்..
ஒவ்வொரு நடுத்தர குடும்பத்தோட கனவுமே ஒரு சொந்த வீடு வாங்க வேண்டும் அப்படிங்கறதுதான்.. அப்படி சரத்குமார் குடும்பம் சொந்த வீடு வாங்க எவ்வளவு கஷ்டப்படுகின்றனர் என்பதை சொல்லியுள்ளார் இயக்குனர் ஸ்ரீகணேஷ்.. சரத்குமார் நடுத்தர குடும்பத்து தலைவனாக , பாசமுள்ள அப்பாவாக, அன்பான கணவராக அருமையான நடிப்பை வெளிப்படுத்தியிருக்காரு.. படம் முழுக்க ஒரே மீட்டர்ல பேசி நடிச்சிருக்காரு. ஒவ்வொரு காலகட்டத்துக்கும் ஏற்ற அவருடைய தோற்றம் நல்லா இருக்கு.. சித்தார்த்துக்கு சித்தா படத்துக்கு அப்புறமா மற்றுமொரு நல்ல கதாபாத்திரம்.. பள்ளி மாணவன், கல்லூரி மாணவன், கணவன் என ஒவ்வொரு காலகட்டத்துக்கும் பொருந்திப் போறாரு.. அப்பா மீது பாசம் வெச்சிருக்கறதாகட்டும் ஒரு கட்டத்துல அவருகிட்ட வெடித்து அழுவதாகட்டும் சிறப்பான நடிப்பை கொடுத்திருக்காரு.. அதேமாதிரி தேவயானி, மீத்தா, சைத்ரா என ஒவ்வொருவருமே தங்களோட அழகான நடிப்ப கொடுத்திருக்காங்க..
இயக்குனர் ஸ்ரீகணேஷ், நடுத்தர மக்களோட வீடு வாங்கும் கனவை சொல்றேன்னு ரொம்பவும் சென்டிமென்ட்டா முயற்சி செஞ்சிருக்காரு.. ஒவ்வொரு முறையும் அவங்க பணம் ரெடி பண்ணும் போதும் தடை வரணும் அப்படின்னு வலிந்து திணிக்கப்பட்டமாதிரியே காட்சிகள் இருக்கு.. வாடகை வீட்ல நடக்குற விஷயங்கள இன்னும் கொஞ்சம் சுவாரஸ்யமா சொல்லி இருக்கலாம்.. முதல் பாதி ரொம்பவும் நல்லா போகுது.. ஆனா இரண்டாம் பாதி கதை நகரவே இல்லன்னு சொல்லலாம்.. நீங்க நல்லா இருக்கனும் என்ன மாதிரி ஆகிடாதீங்க அப்படின்னு சரத்குமார் சொல்ற இடம் கலங்க வைக்குது..
ஒரு சாதாரண ஆவரேஜ் மாணவனா சித்தார்த்தோட கதாபாத்திரம் நம்மில் பலபேரோட முகமா இருக்கு.. பிடிச்ச படிப்ப எடுக்காம பெத்தவங்க ஆசைக்காக எடுத்து அதுல சரியா படிக்கவும் முடியாம பெற்றோருக்காக பொறுத்துக்கிட்டு தன்னோட வாழ்க்கைய எத்தனையோ பேரு தொலச்சிட்டு இருக்காங்க.. அவங்களுக்கு எல்லாம் சித்தார்த் கேரக்டர் கனெக்ட் ஆகும்..அதே மாதிரி நடுத்தர குடும்பத்துல இருந்து பணக்கார வீட்டுக்கு மருமகளா போயி கஷ்டப்படுற எல்லோருக்கும் மீத்தா கேரக்டர் கனெக்ட் ஆகும்..
- அம்ரித் ராம்நாத் மியூசிக்ல பாடல்களும் பின்னணி இசையும் நல்லா இருக்கு.. தினேஷ் பி கிருஷ்ணன் ஒளிப்பதிவு ஒவ்வொரு காலகட்டத்துக்கும் ஏற்ற மாதிரி அழகா அமஞ்சிருக்கு.. கணேஷ் சிவா எடிட்டிங்கும் ஓகே.. நடுத்தர மக்களோட வீடு வாங்கும் கனவை பத்துன படம்தான் ஆனா இரண்டாம் பாதியில கொஞ்சம் சரி பண்ணி இருந்தா சீரியல் பாக்குற உணர்வ தவிர்த்திருக்கலாம்… மொத்தத்துல 3bhk அஸ்திவாரம் இன்னும் கொஞ்சம் பலமா இருந்திருக்கலாம்..