Friday, September 11
Shadow

தமிழ் நடிகர் தக்ஷன் விஜய் மலையாளத்தில் வில்லனாக அறிமுகமாகும் ‘இத்திக்கர கொம்பன்’

தமிழ் நடிகர் தக்ஷன் விஜய் மலையாளத்தில் வில்லனாக அறிமுகமாகும் ‘இத்திக்கர கொம்பன்’

யானையை மையமாக வைத்து உருவாகும்

‘இத்திக்கர கொம்பன்’

 குழந்தைகளைக் கவர வருகிறது.!

 திரைப்படங்களில் விலங்குகள் பங்கேற்கும் கதைகள், விலங்குகளை மையப்படுத்திய கதைகள் குழந்தைகளைக் கவரும் வகையில் அமைந்து பெரிய வெற்றிப் படங்களாக மாறி இருக்கின்றன.அவை மொழியைக் கடந்து மனங்களைக் கவரும்.

அந்த வகையில்’இத்திக்கர கொம்பன்’ என்கிற மலையாளப்படம் உருவாகி வருகிறது. தமிழில் மொழிமாற்றம் செய்து வெளியாக உள்ளது.

இப்படத்தில் சாது என்கிற ஒரு யானை பிரதான பாத்திரத்தில் நடித்துள்ளது.அந்த யானைக்குக் கதையில் உள்ள இடமும் காட்சிகளும் குழந்தைகள் மனதைக் கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. இப்படத்தை ஸ்ரீ லட்சுமி சினி புரொடக்ஷன்ஸ் சார்பில் ராஜன் பாப்பன், ஸ்ரீலா வடகரா தயாரித்துள்ளனர்

 மலையாளத்தில் அறிமுகமான நடிகர்களான டினி டோம், டோனி, கரீனா குறுப்பு, கேசு , சுமேஷ், ஸ்ரீஜா போன்ற நடிப்புக் கலைஞர்கள் முக்கியமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளனர்.

இப்படத்தில் வில்லனாக தமிழ் நடிகர் தக்ஷன் விஜய் மலையாளத்தில் அறிமுகமாகிறார்.அவர் தூத்துக்குடி செல்வம் என்கிற கதாபாத்திரத்தில் மிரட்டும் தோற்றத்தில் வருகிறார். அசர வைக்கும் நடிப்பிலும் மிரள வைக்கும் சண்டைக் காட்சிகளிலும் முத்திரை பதித்திருக்கிறார்.

 படத்திற்குத் திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார் கே. ராஜு. இவர் பிரபல இயக்குநர் கிருஷ்ணசுவாமியிடம் துணை இயக்குநராகப் பணியாற்றியவர். இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

 இப்படத்திற்கு பினீஷ் பாலகிருஷ்ணன் – சீனு வயநாடு ஆகியோர் இசை அமைத்திருக்கிறார்கள்.

வீ.கே . பிரதீப் ஒளிப்பதிவு செய்துள்ளார். யானை தோன்றும் காட்சிகளை அற்புதமாகப் படம் பிடித்துள்ளார்.

சாபு இரன்மல கலை இயக்கத்தையும், ஜான்சன் தாமஸ் படத்தொகுப்பையும் கவனித்துள்ளனர்.சண்டைக் காட்சிகளை ஆக்சன் அஷ்ரப் குருக்கள் அமைத்துள்ளார்.

படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில் படப்பிடிப்பிற்குப் பிந்தைய மெருகேற்றும் பணிகள் நடந்து வருகின்றன. ஒரு விறுவிறுப்பான கதையுடன், குழந்தைகளைக் கவரும்படியான, குடும்பத்தினருடன் பார்க்கும்படியான ஒரு திரைப்படமாக இந்த

  • ‘இத்திக்கர கொம்பன்’ படம் உருவாகி வருகிறது.இப்படத்தின் போஸ்டர் சமூக ஊடகங்களில் வெளியாகி பரபரப்பாகி வருகிறது.

Related posts:

ஐடென்டிட்டி (IDENTITY) பத்திரிக்கையாளர் சந்திப்பு

ZHEN STUDIOS நிறுவனத்தின் முதல் படைப்பாக உருவாகியுள்ள "தருணம்" படம், ஜனவரி 31 ஆம் தேதி வெளியாகிறது !!

புதுமுகங்களுடன் சையாரா படத்தை உருவாக்கும் எண்ணத்தை கைவிட்டிருந்தேன், ஏனெனில் நடிப்புத் திறனுடைய புதுமுகங்களை நான் கண்டுப...

சிறுவயதில் நடந்த அவமானத்தை மனதில் வைத்துக்கொண்டு பெரியவனான பிறகு

புஷ்பா 2 ' புகழ் நடன இயக்குநர் கணேஷ் ஆச்சார்யாவின் நடன இயக்கத்தில் உருவாகும் 'நாக பந்தம்' பட பாடல்*

விஜய்யின் த.வெ.க. முதல் மாநில மாநாட்டுக்கு சைக்கிளில் செல்லும் நடிகர் சௌந்தரராஜா*

இந்திய சினிமாவிலும் சரி தமிழ் சினிமாவிலும் சரி கிரிக்கெட் சம்பந்தமா நிறைய படங்கள் வந்து இருக்கு அதில் பல படங்கள் வெற்றிய...

இந்த சீசனில் ஒவ்வொரு கனவிற்கும் ஒரு கதவு திறக்கிறது: ஆகஸ்ட் 16 முதல் ஜியோஹாட்ஸ்டார் மற்றும் ஸ்டார் விஜயில் ‘Common Man’-...