Thursday, January 15
Shadow

ஜூராசிக் வேர்ல்ட்: ரீ பெர்த் திரைவிமர்சனம்

எத்தனைமுறை பார்த்தாலும் சலிக்காத படங்களில் ஒன்று ஜூராசிக் பார்க். ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் இயக்கிய அந்த படம் 1993ம் ஆண்டு வெளியாகி உலகம் முழுவதும் வெற்றிகரமாக ஓடி சாதனை படைத்தது. அதை தொடர்ந்து ஜூராசிக் பார்க் அடுத்தடுத்த 5 பாகங்கள் உருவாகின. இப்போது 7வது பாகமாக ‘ஜூராசிக் வேர்ல்ட்: ரீ பெர்த்’ தமிழிலும் வெளியாகி உள்ளது. இது 3டி படமும் கூட.

நிலத்தில் வாழ்பவை, நீரில் வாழ்பவை, வானத்தில் பறப்பவை என 3 விதமான டைனோசர்ஸ் இருக்கும் ஒரு தீவுக்குள் ஒரு டீம் செல்கிறது. இந்த 3 வகை டைனோசரிடம் இருந்து ரத்தமாதிரி சேகரித்து அதைக்கொண்டு இதய நோய்க்கு மருத்து உருவாக்கும் ஒரு சர்வதேச மருந்து நிறுவனத்துக்காக இவர்கள் பணியாற்றுகிறார்கள். வெற்றிகரமாக 3 ரத்த மாதிரிகளை இவர்கள் சேகரித்தார்களா? அங்கே டைனோசர்ஸ் பிடியில் சிக்கி எத்தனை பேர் ரத்தம் கக்கி செத்தார்கள் என்பது இந்த பாகத்தின் திரைக்கதை.

அயன்மேன், கேப்டன் அமெரிக்கா, அவெஞ்சர்ஸ், பிளாக்விடோ போன்ற படங்களில் நடித்து புகழ்பெற்ற ஸ்கார்லெட் ஜோஹான்ஸ்சன்தான் இந்த பட ஹீரோயின். இன்னும் சொல்லப்போனால் இது ஹீரோயினுக்கு முக்கியத்துவமுள்ள ஆக்ஷன் படம். அவர் தலைமையில்தான் படகில் ஈக்குவேடார் அருகே உள்ள அந்த தீவுக்கு ஒரு டாக்டர், வில்லத்தனமான மருந்து கம்பெனி நிர்வாகி, பாதுகாப்பு குழு என அந்த டீம் செல்கிறது. இவர்களுடன் டைனோசர்ஸ் தாக்கியதால் படகை இழந்த 4 பேர் குடும்பமும் இவர்களுடன் அந்த தீவில் தத்தளிக்கிறார்கள். இவர்கள் டைனோசர்ஸ் பிடியில் இருந்து எப்படி தப்பிக்கிறார்கள் என்பதே கதை.

Related posts:

நடிகர்கள்: ஆர்ஜே பாலாஜி, செல்வராகவன், கருணாஸ், நட்டி நட்ராஜ், சானியா ஐயப்பன், ஷரஃப் ஒய் தீன், பாலாஜி சக்திவேல்,

HIT 3 படத்தின் திரை விமர்சனம்

‘பறந்து போசி: ஒரு பாசப்போரின் அழகிய பயணம்

தமிழ் சினிமாவில் உண்மையான கிராமத்து வாசம் வீசி வெகு நாட்கள் ஆனது அந்த குறையை தீர்க்க வந்த படம் தான் பூர்வீகம்

திரைப்படம்: நாளை நமதே விமர்சன மதிப்பீடு

DD Next Level’ – திரைவிமர்சனம்

ரீலில் இருந்து ரியல் ஜோடியாக மாறிய அசோக் செல்வன் கீர்த்தியின் ரொமாண்டிக் புகைப்படங்கள்….!!!!

பொதுவாக சமுதிராகணி படம் என்றாலே ஒரு சிறந்த கருத்தை வெளிபடுத்தும் இந்த திரு மாணிக்கமும் மனிதாபிமானம் மற்றும் ஒரு தனி மனித...