
தமிழ் சினிமாவில் அனைவராலும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம் மாரிசன் காரணம் வடிவேலும் பகத் பாசிலும் மீண்டும் இணையும் ஒரு படம் அது மட்டும் இல்லாமல் இந்த படத்தின் போஸ்டர்களும் டிரைலரும் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றதனால் இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரிக்க உள்ளது. அந்த வகையில் இந்த படம் வரும் வெள்ளிக்கிழமையில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் படத்தில் மேல் உள்ள நம்பிக்கையில் பத்திரிக்கையாளர்களுக்கு முன்கூட்டியே இந்த படத்தை காண்பித்துள்ளனர் அதன் அடிப்படையில் இந்த படத்தின் திரைவிமர்சனம் உங்களுக்காக
சுதீஷ் ஷங்கர் இயக்கத்தில் வடிவேலு பகத் பாசில் விவேக் பிரசன்னா சித்தாரா கோவை சரளா தேனப்பன் ரேணுகா லிவிங்ஸ்டன் மற்றும் பலர் நடிப்பில் யுவன் சங்கர் ராஜா இசையில் வெளிவந்திருக்கும் படம் தான் மாரிசன்.
படத்தின் கதையைப் பார்ப்போம்:
மாரிசன் முழுக்க முழுக்க ஒரு திரில்லர் கதை. இந்தப் படத்தின் கதையை சொன்னால் படம் பார்க்கும் சுவாரஸ்யம் கெட்டுப் போய்விடும் ஆகவே படத்தின் கதையை சொல்லாமல் படத்தின் கருவை மட்டும் சொல்லுகிறோம். பள்ளிக்கூட வாத்தியாரின் ஆதரவோடு பள்ளியில் படிக்கும் மாணவிகளை கடத்தி கற்பழித்து வெளிநாட்டுகளுக்கு விற்கும் இந்த கும்பலை எப்படி பிடிக்கிறார்கள் யார் கொலை செய்கிறார்கள் யார் கடத்தியது யார் காப்பாற்றுகிறார்கள் என்பதெல்லாம் படத்தைப் பார்க்கும்போது மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும்.
படத்தின் மிகப்பெரிய பலம் என்று சொன்னால் அது இயக்குனர் குறிப்பாக திரைக்கதை படத்தின் இன்னொரு பலம் வடிவேலும் மற்றும் பகத் பாசில்.
வடிவேலு நல்ல நடிகர் என்று நமக்கு தெரியும் நல்ல காமெடியன் என்று தெரியும் ஆனால் இதுவரை நாம் பார்க்காத ஒரு வடிவேலை இந்த படத்தில் பார்க்கலாம். ஒவ்வொரு காட்சிகளிலும் வடிவேலு மிக அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி உணர்ச்சிபூர்வமான நடிப்பை வெளிப்படுத்தி நம் அனைவரையும் கவருகிறார். குறிப்பாக ஞாபகம் வருகை தரும் காட்சிகளில் மிக அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி உளளார்.
பகத் பாசில் ஒவ்வொரு காட்சியலும் நகைச்சுவை கலந்த ஒரு நடிப்பின் மூலம் நம்மளை கவர்கிறார். அவர் செய்யும் ஒவ்வொரு திருட்டுத்தனமும் வடிவேலுவுடன் இணைந்து ஆலன் நடிக்கும் ஒவ்வொரு காட்சிகளிலும் நம்மை மிகவும் கவர்ந்திருக்கிறது. தன் கதாபாத்திரம் புரிந்து மிக அற்புதமான இயல்பான ஒரு நடிப்பின் மூலம் நாம் மனதில் மிகப்பெரிய இடம் இடம் பிடிக்கிறார் பகத் பாசில்
விவேக் பிரசன்னா இவரும் படத்திற்கு மிகப்பெரிய பலம் குறைந்த காட்சிகள் வந்தாலும் நம் மனதில் நிறைவாக நிற்கிறார் படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் வந்து நம்மை கவருகிறார் இவர் வரும் காட்சிகள் அனைத்தும் அருமையாக உள்ளது.
படத்தின் அடுத்த மிகப்பெரிய பலம் என்று சொன்னால் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா படத்தின் முதல் பாதி வடிவேலும் பவர் பாசிலும் பேசிக்கொண்டே இருக்கிறார்கள் அதுவும் ஒரு மோட்டர் பைக்கில் பயணம் செய்து கொண்டே இருக்கிறார்கள். இந்த காட்சிகள் சிறிதும் நமக்கு சளிப்படைய விடாமல் மிக அற்புதமான பின்னணிசையின் மூலம் படத்துக்கு பலம் சேர்த்திருக்கிறார் யுவன் சங்கர் ராஜா.
படத்திற்கு இன்னொரு பலம் வி கிருஷ்ணமூர்த்தி இவருடைய கதை திரைக்கதை வசனம் நம் அனைவரையும் மிகவும் கவர்ந்துள்ளார். குறிப்பாக படத்தின் திரைக்கதை முதல் பாகமாக இருக்கட்டும் இரண்டாம் பாகமாக இருக்கட்டும் இரண்டிலுமே ஒரு திரில்லருக்கான அற்புதமான ஒரு திரை கதையை கொடுத்திருக்கிறார். முதல் பாதியில் ஒரு மெய்யழகன் படத்தின் திரைக்கதை போலவே சிறப்பான ஒரு திரை கதையை கொடுத்திருக்கிறார் இரண்டாம் பாகத்தில் அற்புதமான ஒரு திரில்லர் திரைக்கதையை கொடுத்து நம்மை ரசிக்க வைத்திருக்கிறார் கிருஷ்ணமூர்த்தி.
மொத்தத்தில் மாரிசன் மனதை வருடும் சுகமான ஒரு திரில்லர் கதை என்று தான் சொல்ல வேண்டும்.
