
நடிகர்கள் : சமுதிரக்கனி, பரத், சுரபி லட்சுமி, ஐஸ்விகா, ரிதேஷ், பிரேம்குமார், பி.கே.மேதினி
இசை : எம்.கே.அர்ஜுனன், பெரும்பாவூர் ஜி.ரவீந்திரநாத், ஜேம்ஸ் வசந்தன், சிஜே குட்டப்பன், அஞ்சல் உதயகுமார்
ஒளிப்பதிவு : கவியரசு
இயக்கம் : அனில் வி.நாகேந்திரன்
தயாரிப்பு : விசாரத் கிரியேஷன்ஸ்
கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சியை நிறுவிய முதல் செயலாளரும், புரட்சி வீரருமான பி.கிருஷ்ண பிள்ளையின் வீர வாழ்க்கை வரலாறு மற்றும் கேரளாவுக்கும், தமிழகத்துக்கும் அரசியல் ரீதியாகவும், பெண்கள் முன்னேற்றம் மற்றும் சமூக நீதி போராட்டங்கள் ரீதியாகவும் இருக்கும் ஒற்றுமையை எடுத்துரைப்பது தான் இப்படத்தின் கதை.
தமிழக கிராமம் ஒன்றின் செல்வந்தரான பரத், கம்யூசனிவாதியாக இருக்கிறார். ஊர் மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்வதோடு, சாதி, ஏழை பணக்காரன் என்ற ஏற்றத்தாழ்வுகள் பார்க்காமல் அனைவருடனும் சகஜகமாக பழகுகிறார். அதே சமயம், அவரது பக்கத்து ஊரில் சாதி வன்கொடுமை பிரச்சனைகளில் பாதிக்கப்படும் மக்களுக்கு துணையாக நிற்பதோடு, அம்மக்களைபிரச்சனைகளை எதிர்த்து போராட வைப்பதற்காக அவர்களை கேரளாவுக்கு அழைத்துச் சென்று கம்யூனிச போராளிகளை சந்திக்க வைக்கிறார். அப்போது 96 வயதுள்ள பெண் கம்யூனிச போராளி பி.கே.மேதினி, புரட்சி வீரர் பி.கிருஷ்ண பிள்ளையின் வாழ்க்கை வரலாறு மற்றும் கேரளாவில் கம்யூனிய புரட்சி உருவாகி, விஸ்வரூபம் எடுத்தது என்பதை விவரிப்பது தான் ‘வீரவணக்கம்’.
