Thursday, April 16
Shadow

நீளிரா திரைப்படத்தின் திரை விமர்சனம்

நீளிரா திரைப்படத்தின் திரை விமர்சனம்

சோமிதரன் இயக்கியுள்ள நீளிரா படம் இலங்கையில போர் சூழல் சமயத்துல ஒரு திருமண வீடு சந்திக்குற பிரச்சனைய பத்தின படமா எடுக்கப்பட்டிருக்கு.. நீளிரா அப்படின்னா நீண்ட இரவு அப்படின்னு அர்த்தம்.‌ இலங்கைல போர் சூழலுக்கு மத்தியில வாழ்ற ஒரு குடும்பத்துல மகளோட திருமணத்துக்கு கூட இந்திய அமைதி காப்பு படைகிட்டயும் , இலங்கை ராணுவத்துக்கிட்டயும் அனுமதி பெற வேண்டிய நிலை. விடிஞ்சா திருமணம் என்ற நிலையில வீட்டுக்கு வெளியே இந்திய அமைதி காப்பு படையினர் சிலர் வந்து நிக்குறாங்க.. பக்கத்துல போராளிகளுக்கும் ராணுவத்துக்கும்‌ பயங்கர சண்டை நடக்குது.. திருமண வீட்டு குடும்பத்தினருக்கோ பதற்றம்.. காலைல பெரும் படை வந்து காப்பத்துற வரைக்கும் இந்த வீரர்கள் அந்த வீட்டிலேயே இருக்க வேண்டிய சூழல் ஏற்படுது.. வீட்டுக்குள்ள தஞ்சம் புகுந்த வீரர்கள் அந்த குடும்பத்தினர எப்படி நடத்ததுனாங்க.. இவங்க தேடி போராளிகள் தேடி வந்தாங்களா.. போருனால எளிய மக்களுக்கு எந்தவித பாதிப்பு ஏற்படுது அப்படிங்கறத ஒரே இரவுல நடக்குற கதையா சொல்லிருக்காரு இயக்குனர் சோமிதரன்..

படத்துல நடிச்ச அத்தனை பேருமே அருமையான நடிப்ப கொடுத்திருக்காங்க.. யாருமே இவங்கதான் முக்கிய கேரக்டர் அப்படின்னு இல்லாம எல்லோருமே சூப்பரா நடிச்சிருக்காங்க.. நவீன் சந்திரா ராணுவ வீரராகவும் தன்னோடு பொறுப்ப உணர்த்தும் நடிச்சிருக்காரு.. கபிலா வேணு, சிது குமரேசன், ரூபா கொடுவாயூர் என எல்லோருமே நல்ல நடிப்ப கொடுத்திருக்காங்க.. கயல் வின்சென்ட், சனந்த் நடிப்பும் படத்துக்கு உறுதுணையா இருக்கு..

படத்துக்கு மிகப் பெரிய பலம்னா அது செல்வரத்தினம் பிரதீபனோட ஒளிப்பதிவும் கே உடைய பின்னணி இசையும் தான்.. இரவு நேர காட்சிகளை படமாக்கிய விதம் நாமும் அந்த களத்தோட பயணிக்கற உணர்வ கொடுத்திருக்கு..

இயக்குனர் இலங்கைல பிறந்து அதே சூழல்ல வாழ்ந்தவர் என்பதால் தான் கண்ட காட்சிகளை உண்மைக்கு நெருக்கமாக கொடுத்துள்ளார்.. சாதாரணமாக சாலையில் நடந்து செல்ல கூட முடியாத அந்த இடத்துல திருமணம் கூட சுதந்திரமாக நடத்த முடியாமல் தவிக்கும் மக்களோட வலியை அப்படியே கடத்தியிருக்காரு.. வெற்றி தோல்விய தாண்டி இதுபோன்ற படங்கள் இன்னும் வரவேண்டும் என்பதே எல்லோருடைய கருத்தாக இருக்கு.. மொத்தத்துல நீளிரா… வலி நிறைந்த இரவு..