Thursday, April 16
Shadow

கார்மேனி செல்வம் திரை விமர்சனம்

கார்மேனி செல்வம் திரை விமர்சனம்

கார்மேனி செல்வம்.. இந்த படத்தோட கதை என்னன்னா.. ஹீரோ சமுத்திரக்கனி, மனைவி மற்றும் பையனோட மிடில் கிளாஸ் வாழ்க்கை வாழ்ந்திட்டு இருக்காரு.. கௌதம் மேனன் கிட்ட கார் டிரைவராக வேலை செஞ்சிட்டு இருக்காரு. சொந்தமா ஒரு வீடு வாங்க வேண்டும் அப்படிங்கற கனவோடு இருக்காங்க கணவனும் மனைவியும்.. இந்த நிலையில ஒரு சின்ன தேவைக்காக கடன் வாங்கும் சமுத்திரக்கனி அடுத்தடுத்து கடன் வாங்கி கடனாளி ஆகிடுறாரு.. இதுனால குடும்பத்துல பல பிரச்சனைகள் வருது.. அதுமட்டுமில்லாம கௌதம் மேனனுக்கு தெரியாம சமுத்திரக்கனி செய்யுற விஷயம் வேறொரு பிரச்சனைய கொடுக்குது. இதுல எல்லாம் இருந்து சமுத்திரக்கனி தப்பித்தாரா.. இல்லையா அப்படிங்கறதுதான் இந்த படத்தோட‌ கதை..

படத்தோட நாயகன் சமுத்திரக்கனி வழக்கம் போல தன்னோட இயல்பான நடிப்பால படத்த தாங்கி பிடிச்சிருக்காரு.. சராசரி மிடில் கிளாஸ் கணவனா, அப்பாவா கனவுகளோட சுத்துற சராசரி மனுஷனா எல்லாவித உணர்வுகளையும் அழகா வெளிப்படுத்திருக்காரு.. எப்படியாச்சும் பணம் சம்பாதிக்கனும் அப்படிங்கற வேகத்துல தப்பு செய்யுறதும் அதை உணருட இடமும் நடிப்புல கவனிக்க வைக்குறாரு.. அன்பான மனைவியா லட்சுமி பிரியா சந்திரமௌலி.. கணவன விட்டுக்கொடுக்காத மனைவியா கணவன் தப்பு செய்யும்போது எல்லாம் கண்டிக்கிற இடங்கள்ல நடிப்புல அசத்தியிருக்காங்க.. தன்னோட ஆசைகள உள்ளுக்குள்ளேயே வெச்சிக்கிட்டு வெளியில சிரிக்குற அத்தனை மிடில்கிளாஸ் குடும்ப தலைவிகளோட முகமா திரையில மிளிருறாங்க.. பையனா நடிச்சிருக்கற கிரணோட நடிப்பும் நல்லா இருக்கு..

கௌதம் மேனன் மற்றும் அபிநயா ரெண்டு பேரும் கதையோட ஓட்டத்துக்கு உதவியிருக்காங்க.. கார்த்திக் குமார், படவா கோபி, மதுமிதா, கோதண்டம் உள்ளிட்டவங்களோட நடிப்பும் நல்லா இருக்கு..

யுவராஜ் தக்ஷனோட ஒளிப்பதிவு படத்துக்கு பக்கபலமா இருக்கு.. ராமானுஜத்தோட இசையில பாடல்கள் மற்றும் பின்னணி இசை படத்துக்கு மேலும் வலு சேர்த்திருக்கு.. எழுதி இயக்கியிருக்கற ராம் சக்ரி, தேவைகளுக்காக கடன் வாங்கலாம் ஆனா கடன் வாங்கி ஆடம்பர செலவு செய்யக்கூடாது என்கிற கருத்தை வலியுறுத்தியிருக்காரு.. அதே மாதிரி குடும்பத்துக்காக வெளிநாட்ல வேலை செய்யுறவங்களோட மனநிலை எப்படி இருக்கும் அப்படிங்கறதையும் நல்லா எடுத்து சொல்லியிருக்காரு..

திரைக்கதையில இன்னும் அழுத்தம் சேர்த்திருந்தா சூப்பர் படமா வந்திருக்கும். ஆனாலும் குறையில்லாத ஒரு ஃபீல் குட் படமா வந்திருக்கு.. மொத்தத்துல கார்மேனி செல்வம்.. கனவு மெய்ப்படும்..