Friday, October 24
Shadow

கிரிக்கெட்டை வைத்து அரசியல் பேசும் புளூ ஸ்டார் படம் எப்படி உள்ளது…? விமர்சனம் இதோ….!!!!

ப்ளூ ஸ்டார் விமர்சனம் 3.25/5

ஜெயக்குமார் இயக்கத்தில் அசோக் செல்வன் , ஷாந்தனு பாக்யராஜ், பிரித்வி, கீர்த்தி பாண்டியன், பக்ஸ், குமரவேல், லிஸ்ஸி ஆண்டனி, T.N அருண்பாலாஜி, திவ்யா துரைசாமி உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகி வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் ப்ளூ ஸ்டார்.

திரைக்கதை மற்றும் வசனத்தை தமிழ்ப்பிரபா கவனித்திருக்கிறார். கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்கிறார். தமிழ் அழகன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

 

அரக்கோணம் பகுதியில் கதை நகர்கிறது. கிரிக்கெட் விளையாட்டு போட்டியில் சண்டை ஏற்பட்டு சில வருடங்களாக இரு கிராமத்தினரும் எதிரும் புதிருமாக இருக்கிறார்கள்.

ப்ளூ ஸ்டார் அணிக்கு அசோக் செல்வன் கேப்டனாகவும், ஆல்பா என்ற அணிக்கு ஷாந்தணு கேப்டனாகவும் இருக்கிறார். இந்த இரு அணிகள் எப்போதும் எதிரும் புதிருமாக இருக்கிறார்கள்.

இந்நிலையில், கோவில் திருவிழா வர, பெரியவர்கள் பேசி இரு அணிக்கும் கிரிக்கெட் போட்டி நடத்த திட்டமிடுகிறார்கள்.

 

இந்த போட்டியில் எப்படியும் ஜெயித்தே ஆக வேண்டும் என்று லீக் போட்டியில் ஆடும் க்ளப் வீரர்கள் நால்வரை தன் அணியில் சேர்த்துக் கொள்கிறார் ஷாந்தணு. அந்த போட்டியில் ஆல்பா அணி ஜெயித்துவிட, ஷாந்தணு க்ளப் வீரர்களால் அவமானப்படுத்தப்படுகிறார்.

அதை தட்டிக் கேட்கிறார் அசோக் செல்வன். இருவரும் நண்பர்கள் ஆகிவிடுகின்றனர். இரு அணிகளும் இணைந்து செயல்பட்டு, க்ளப்பிற்குள் கால் பதிக்க வேண்டும் என்று அங்கு நடைபெறும் கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்கின்றனர்.

இறுதியில், தங்களை அவமானப்படுத்திய வீரர்களின் மத்தியில் இவர்கள் வென்றார்களா இல்லையா என்பதே படத்தின் மீதிக் கதை.

படத்தில் நடித்த நடிகர்கள் அனைவரும் தங்களது கதாபாத்திரத்தை வலு உணர்ந்து நடித்திருக்கிறார்கள். அசோக் செல்வன், சாந்தணு மற்றும் ப்ரித்வி படத்திற்கு சரியான தேர்வு.

 

ப்ரித்வியின் குறும்புத்தனம் படத்தில் அதிகமாகவே ரசிக்க வைத்தது.. அசோக் செல்வனின் காதல், எமோஷன், ஆக்‌ஷன், என அனைத்தையும் படத்தில் காண முடிந்தது. அதில் நன்றாகவே ஸ்கோர் செய்திருக்கிறார்.

சாந்தணு தனது கதாபாத்திரத்தில் ஜொலித்திருக்கிறார். கீர்த்தி பாண்டியன் கொஞ்சி பேசும் வசனங்கள் ரசிக்க வைத்தது.

படத்திற்கு மிகப்பெரும் பலம் என்றால் அது வசனம் தான். பல இடங்களில் தனது சாட்டையை சுழற்றியிருக்கிறார் வசன கர்த்தா தமிழ் பிரபா.

Related posts:

மேக்ஸ் கன்னடதிலும் தமிழிலும் ஒரே சமயதில் உருவாக்கபட்ட படம் கிச்சா சுதீப்க்கு தமிழில் தன் கி ஓங்கவேண்டும் என்ற ஆசையில் தய...

இந்திரா : பார்வையாளரை இருக்கையின் நுனியில் அமர வைக்கும் க்ரைம் த்ரில்லர்

Tribute to the Bravehearts! Celebrate this Diwali with #Amaran

தமிழ் மக்கள் கொடுத்த மணிமகுடத்தை என்றும் அவரிடமே வைத்திருக்கும் வேட்டையன் ரஜினி அவர்களுக்கு என்றும் அன்புடன் OTP CINEMa...

தயாரிப்பாளர்கள் தேடும் தடையற்ற இணைவை எப்போதும் அடையாத வெறித்தனமான கூறுகளின் வெறித்தனமான மேஷப், கேம் சேஞ்சர், எழுத்தாளர்-...

அனுராக் காஷ்யப் வழங்க, சைஜு ஸ்ரீதரனின் "ஃபுட்டேஜ்" டிரெய்லர் வெளியாகியுள்ளது !*

3bhk படத்தோட விமர்சனத்தை பாக்கலாம் 

கடைசியில், "நிறம் மாறும் உலகில்" படம் ஒரு தாயின் பாசத்தின் மூலம் புனிதமான தொடர்புகளை அழகாக காட்சிப்படுத்துகிறது,