பேரன்பும் பெருங்கோவம் – திரைவிமர்சனம்
பேரன்பும் பெருங்கோவம் - திரைவிமர்சனம்
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் தங்கர்பச்சான் இவர் இயக்கிய படங்கள் அனைத்தும் வாழ்வியலை சொல்லும் படமாக அமைந்தது. அப்படி பட்ட இயக்குனரின் மகன் விஜித் பச்சான் இந்த பேரன்பும் பெருங்கோவம் படத்தில் நாயகனாக நடித்து இருக்கிறார்.அதோடு தங்கர்பச்சான் உதவி இயக்குநர் சிவபிரகாஷ் தான் இந்த படத்தை இயக்கியுள்ளார்.
இந்த படத்தில் விஜித் பச்சான் ,மைம் கோபி அருள்தாஸ், தீபா,சாலி நிவேகாஷ், கீதா கைலாசம் ,சுபத்ரா ராபர்ட் மற்றும் பலர் நடிப்பில் இளையராஜா இசையில் சிவபிரகாஷ் இயக்கத்தில் வெளிவந்து இருக்கும் படம் தான் பேரன்பும் பெருங்கோவம் .
கதைக்குள் போகலாம்:
தேனி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் ஊர் தலைவர் அதோடு சாதி கட்சியின் மந்திரியுமான மைம் கோபி பிடிய...








