
பென் ஸ்டூடியோஸ் ஜெயந்திலால் காடா தயாரிப்பில், பிரபு சாலமன் இயக்கத்தில் “கும்கி 2
*பென் ஸ்டூடியோஸ் ஜெயந்திலால் காடா தயாரிப்பில், பிரபு சாலமன் இயக்கத்தில் “கும்கி 2”;*
யானைக்கும், சிறுவனுக்கும் இடையேயான காதல் கதை “கும்கி 2” படத்தை பென் ஸ்டூடியோஸ் சார்பில் வழங்கும் ஜெயந்திலால் காடா;
பிரபு சாலமன் இயக்கத்தில் விரைவில் வெளியாகும் கும்கி 2;
தமிழ் திரையுலகில் யானையை மையமாக கொண்டு மனதில் நிற்கும் கதை சொல்லப்பட்ட படம் “கும்கி”, பதிமூன்று வருடங்களுக்கு பிறகு அதன் அடுத்த பாகமாக “கும்கி 2” வெளியாகவுள்ளது.
முதல் பாகத்தில் பார்வையாளர்களை உணர்ச்சியால் உருக்கி, விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரிய வெற்றியை பெற்ற “கும்கி” திரைப்படம், இன்றும் ரசிகர்களின் மனதில் நிலைத்திருக்கிறது. அந்த வெற்றியைக் தொடர்ந்து, மேலும் பரபரப்பான கதைக்களத்துடன் “கும்கி 2” உருவாகியுள்ளது.
இந்த படத்தை பிரபு சாலமன் இயக்குகிறார், ஒரு குழந்தைக்கும், சிறிய யானைக்கும் இடையேயான பிணைப்பு தான் இப்ப...