
படத்தின் தலைப்பு தலைப்பு கேட்ப கதை ஆனால் சொல்லப்பட்ட விதம் அருவருப்பு
ராபர்ட் வனிதா இருவரும் காதல் திருமணம் செய்து மிகவும் சந்தோஷமாக வாழ்கிறார்கள் ஆனால் இவர்களுக்கு குழந்தை பெற்றுக் கொள்ளும் எண்ணமில்லை காரணம் இளமையதில் ஏற்பட்ட ஒரு சிறிய விபத்தால் மீண்டும் இவர் கருத்தரித்தால் இவருக்கு உயிர் ஆபத்து என்று டாக்டர்கள் சொல்லிவிடுகிறார்கள் இதனால் ராபர்ட் தன் மனைவியை மிகவும் நேசிப்பதால் குழந்தை வேண்டாம் என்ற எண்ணத்தோடு வாழ்ந்து வருகிறார். ஆனால் 40 வயதில் கூட இருக்கும் தோழிகளின் அதாவது கிழட்டு தோழிகளிஅறிவுரையின்படி தனக்கு குழந்தை வேண்டும் என்று ராபரிடம் தொந்தரவு செய்கிறார். ஆனால் ராபர்ட் தன் மனைவியின் நிலைமையை புரிந்து கொண்டு தவிர்க்கிறார் இதனால் இவர்களிடம் ஏற்படும் பிரச்சனையை நீதி கதையாக சொல்லி இருக்கிறார் இயக்குனர்.
படத்தில் நடித்தவர்கள் அனைவருமே கதாபாத்திரத்தில் வயதை தாண்டி அவர்கள் தான் முற்றிலும் கிழவன் கிழவிகள் தான் இந்த படத்தில் நடித்திருக்கிறார்கள் படம் ஆரம்பகாட்சியில் இருந்து ஆபாசம் அள்ளித் தெளிககிறது. தன் உடல் அமைப்புக்கு ஏற்றவாறு கதாபாத்திரத்தை வடிவமைத்திருக்க வேண்டும் அதை விட்டுவிட்டு மிகவும் அருவருப்பான உடைகளில் வலம் வரும் வனிதா கவர்ச்சி என்று நினைத்தார் ஆனால் அது கன்றாவியாகிவிட்டது.
இயக்குனர் இந்த படத்தில் வைத்திருக்கும் பல காட்சிகள் திரையரங்கில் அருவருப்பை ஏற்படுத்தும் தயவு செய்து யாரும் இந்த படத்தை குழந்தைகளுடனும் குடும்பத்துடன் சென்று விடாதீர்கள் குறிப்பாக நீச்சல் குளத்தில் வைத்திருக்கும் ஒரு காட்சி மிகவும் அருவருப்பான காட்சி இதை ஒரு பெண் எப்படி படம் ஆக்கினார் தயாரித்தார் என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது என்னதான் மாடன் உலகில் இருந்தாலும் நமக்கு நின்று ஒரு கலாச்சாரம் இருக்கிறது தமிழ் சினிமாவுக்கு என்று ஒரு அர்த்தம் இருக்கிறது அந்த அர்த்தத்தை மீறிய படம் தான் இந்த படம் மொத்தத்தில் ஒரு அருவருப்பான படம்
