
கடந்த மாதம் வெளியாகி படுதோல்வி அடைந்த லால் சலாம் படத்தின் தோல்விக்கு இதுதான் காரணம் என அந்த படத்தின் இயக்குனர் ஐஸ்வர்யா புதிய காரணம் ஒன்றை கண்டுபிடித்து உருட்டியுள்ளார்.
ஏற்கனவே அளித்த பேட்டி ஒன்றில் லால் சலாம் படத்தின் தோல்விக்கு மொய்தீன் பாய் கேரக்டரில் நடித்த ரஜினி தான் காரணம் என கூறி இருந்தார். அதாவது ரஜினி அந்த படத்தில் கேமியோ ரோலில் தான் நடிக்க வந்தார்.
ஆனால் அவரை வைத்து வெறும் 10 நிமிட காட்சியை எடுக்க முடியவில்லை. அதனால் அவருக்கு முக்கியத்துவம் கொடுத்ததில் படத்தின் கதை மாறிவிட்டது என்று சில உருட்டுகளை உருட்டி இருந்தார்.
இந்நிலையில் தற்போது லால் சலாம் படத்திற்காக கிரிக்கெட் போட்டி ஒன்றை உண்மையான கிரிக்கெட் போட்டி போல் கிட்டத்தட்ட 21 நாட்கள் ஷூட்டிங் செய்திருந்தார்களாம். ஆனால் அந்த காட்சிகள் அனைத்தும் காணாமல் போய்விட்டதாம்.
கடைசி நேரத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் இருந்ததை வைத்து எடிட் செய்து திருப்தியே இல்லாமல் தான் படத்தை வெளியிட்டோம். ஒருவேளை அந்த காட்சிகள் இருந்தால் நிச்சயம் படம் நன்றாக இருந்திருக்கும் என கூறியுள்ளார்.
