
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரை வந்து சாதித்த பல பிரபலங்கள் பட்டியலில் முக்கிய நபர் தான் காமெடி நடிகர் பால சரவணன்.
முன்னதாக விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் சீரியலில் நடித்து வந்த இவர் சமுத்திரக்கனியின் குட்டிப்புலி படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.
அதனை தொடர்ந்து தனது காமெடி திறமை மூலம் கொஞ்சம் கொஞ்சமாக தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை பிடித்த பால சரவணனுக்கு தனி ரசிகர்கள் உருவாகினார்கள்.
குறிப்பாக விமல் நடிப்பில் வெளியான விலங்கு என்ற வெப் தொடரில் பால சரவணன் காமெடி அல்லாமல் சீரியஸான கேரக்டரில் நடித்து அவருக்கு இப்படியும் நடிக்க தெரியும் என்று நிரூபித்து இருந்தார்.
இவர் ஹேமா என்பவரை காதலித்து பல போராட்டங்களுக்கு பின்னர் வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் நடிகர் பால சரவணனின் லேட்டஸ்ட் குடும்ப புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன. இதனை பார்த்த பலரும் இவருக்கு இவ்வளவு பெரிய குழந்தைகளா என ஷாக்காகி வருகிறார்கள்.
