Thursday, April 16
Shadow

அரண்மனை 4 டிரைலர் வெளியீட்டு விழாவில் ஜொலித்த பிரபலங்கள்…!!!

இயக்குனர் சுந்தர் சி முறைமாமன் படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். அதனை தொடர்ந்து காமெடி ஜானரில் படம் இயக்கி ஹிட் கொடுத்து வந்தார்.

 

இந்நிலையில் ஒரு கட்டத்திற்கு மேல் ஹாரர் ப்ளஸ் காமெடி பக்கம் சென்ற சுந்தர் சி யின் படைப்பு தான் அரண்மனை. முதல் பாகம் ஓரளவிற்கு நல்ல வரவேற்பை பெற்றது.

 

அதன் காரணமாக அடுத்தடுத்து மூன்று பாகங்களை இயக்கிய சுந்தர் சி தற்போது அரண்மனை நான்காவது பாகத்தை இயக்கியுள்ளார். இதில் தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு மற்றும் கோவை சரளா போன்ற பலர் நடித்துள்ளனர்.

 

முந்தைய பாகங்களை போலவே காமெடி ப்ளஸ் ஹாரர் த்ரில்லராக உருவாகியுள்ள இந்த படம் ஏப்ரல் மாதம் வெளியாக உள்ளது. இந்நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது.

 

அதில் தமன்னா, ராஷி கண்ணா, குஷ்பு மற்றும் அவரின் மகள், கோவை சரளா போன்ற பலர் பங்கேற்றனர். தற்போது இதன் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன.