Thursday, April 16
Shadow

டபுள் டக்கர் பட ஆடியோ வெளியீட்டு விழாவில் பங்கேற்ற பிரபலங்களின் புகைப்படங்கள்…!!!!

மீரா மஹதி இயக்கத்தில் ஒரு பேண்டஸி காமெடி படமாக உருவாகி இருக்கும் படம் தான் டபுள் டக்கர். இந்த படத்தில் இரண்டு அனிமேஷன் கேரக்டர்கள் இடம்பெற்றுள்ளன.

 

தீரஜ் நாயகனாக நடிக்க ஸ்மிருதி வெங்கட் ஹீரோயினாக நடித்துள்ளார். இவர்கள் தவிர கோவை சரளா, எம்எஸ் பாஸ்கர், யாஷிகா ஆனந்த், காளி வெங்கட், கருணாகரன் போன்ற பலர் நடித்துள்ளனர்.

 

மேலும் ஒரு நீண்ட இடைவெளிக்கு பின்னர் இசையமைப்பாளர் வித்யாசாகர் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். கெளதம் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

கோடை கொண்டாட்டமாக வெளியாக உள்ள இந்த படம் நிச்சயம் குழந்தைகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

 

ஏனெனில் இதில் இடம்பெற்றுள்ள அந்த அனிமேஷன் கேரக்டர்கள் படத்தில் காமெடி கேரக்டர்களாக குழந்தைகளை கவரும் வகையில் உருவாகியுள்ளன.

 

படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் போன்றவை ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற நிலையில், சமீபத்தில் படத்தின் இசைவெளியீட்டு விழா நடந்துள்ளது.

 

இதில் நடிகர் ஜெயம் ரவி மற்றும் இயக்குனர் கேஎஸ் ரவிக்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றுள்ளனர். தற்போது இந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன.