Saturday, April 18
Shadow

இட்லி கடை திரைவிமர்சனம்

இட்லி கடை.. இந்த படத்தோட கதை என்னன்னா.. தனுஷ் அப்பா ராஜ்கிரண் இட்லி கடை வெச்சிருக்காரு.. அந்த கடைதான் அவருக்கு உசுரு.. இந்த நிலையில தனுஷும் அப்பா மாதிரி வரனும்னு ஆசைப்பட்டு கேட்டரிங் படிச்சிட்டு வெளிநாட்டுல வேலைக்கு போய்டுறாரு.. வெளிநாட்டுல சத்யராஜோட கம்பெனியில வேலை செய்யுறாரு தனுஷ்.. சத்யராஜோட மகன் அருண் விஜய் பொறுப்பில்லாமல் சுத்திட்டு இருக்காரு.. அருண் விஜய்க்கு தனுஷ கண்டா பிடிக்காது.. சத்யராஜ் மகளுக்கும் தனுஷுக்கும் திருமணம் நிச்சயமாகுது.. இந்த நிலையில அப்பா ராஜ்கிரண் இறந்துவிட இறுதிச் சடங்கு செய்ய இந்தியா வர்றாரு தனுஷ்.. அந்த நேரத்துல அம்மாவும் இறந்துவிட தனுஷ் அப்பா நடத்துன இட்லிக்கடைய பாத்துக்க ஊர்லயே இருந்துடுறாரு.. இதுனால கல்யாணம் நின்னுட கூடாதுன்னு சத்யராஜ் நினைக்க, அருண் விஜய், தனுஷ கூட்டிட்டு போக இந்தியா வர்றாரு.. இறுதியில தனுஷ் வெளிநாடு போய் சத்யராஜ் பொண்ண திருமணம் செஞ்சாரா? அருண் விஜய்க்கும் தனுஷ்க்கும் என்ன பிரச்சினை?..அப்பாவோட கனவு என்ன ஆச்சு? இதுக்கு பதில் சொல்லுது இட்லி கடை..

 

சாதாரண கதையை முடிஞ்ச அளவுக்கு எமோஷனல் கலந்து கொடுத்திருக்காரு தனுஷ்.. தனுஷோட நடிப்பு வழக்கம் போல சூப்பர்..சொந்த ஊரு, சொந்த மண், மக்கள்னு நம்மள பழைய நினைவுகளுக்கு கூட்டிட்டு போறாரு.. சிம்பிளான கதைக்கு அழகான திரைக்கதை அமச்சி ரசிக்க வெச்சிருக்காரு.. ராஜ்கிரண் அப்பாவா கலங்க வெச்சிருக்காரு.. சத்யராஜ் கார்ப்பரேட் அப்பாவா மகனுக்காக எதுவும் செய்யற கேரக்டர் நல்லா பண்ணியிருக்காரு.. அருண் விஜய்க்கு ஈகோவால எந்த எல்லைக்கும் போற கதாபாத்திரம் சிறப்பா நடிச்சிருக்காரு..

 

நித்யா மேனன் வழக்கம் போல சூப்பர் ஆக்டிங்.. சமுத்திரக்கனி, பார்த்திபன், இளவரசு நடிப்பும் நல்லா இருக்கு.. என்னதான் கால ஓட்டத்துல சொந்த ஊரைவிட்டு வெளிநாட்டுக்கு போனாலும் சொந்த ஊர்தான் சொர்க்கம் அப்படிங்கிற கருத்த சொல்லிருக்காங்க.. ஜிவி பிரகாஷ் இசையில் பாடல்கள் ஓகேதான்.. பின்னணி இசை நல்லா இருக்கு. ஒளிப்பதிவு சூப்பரா இருக்கு..

 

முதல்பாதி எமோஷனலா விறுவிறுப்பா போகுது.. இரண்டாம் பாதி கொஞ்சம் தடுமாறுது. தனுஷ் இயக்குனரா இன்னும் மெருகேறி இருக்காரு.. அப்பா கஸ்தூரி ராஜாவோட கிராமத்து பட ஸ்டைல் இவருக்கும் கைவந்திருக்கு. இரண்டாம் பாதி பழிவாங்கும் கதையா மாறிடுச்சு.. இட்லி கடைதான் அப்பாவோட ஆன்மா… நம்ம முன்னோர்களோட மூச்சுக் காத்து எப்பவும் நம்மள சுத்திகிட்டு நம்ம கூடவே இருந்து காப்பாத்தும்னு சொல்லியிருக்காங்க.. நமக்கு ஒரு பிரச்சினைனா ஊரும் ஊர் மக்களும் கூட இருப்பாங்க என்று சொல்ற காட்சிகள் அருமை.. இரண்டாம் பாதியில இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம்.. மொத்தத்துல இட்லி கடை மலரும் நினைவுகள்..