Saturday, October 18
Shadow

காந்தி கண்ணாடி திரைவிமர்சனம்

காந்தி கண்ணாடி திரைவிமர்சனம்

தமிழ் சினிமாவில் சமீபத்தில் வந்த திரைப்படங்களில் மிகச்சிறந்த கதை அம்சம் மற்றும் திரைக்கதை அம்சம் கொண்ட ஒரு படம் என்று சொன்னால் அது காந்தி கண்ணாடி

 

காந்தி கண்ணாடி இந்த படத்தில் பாலா கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார் அவருக்கு ஜோடியாக நமிதா கிருஷ்ணமூர்த்தி என்ற புதுமுகநாயகி அறிமுகமாகிறார். இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் ஏன் கதையின் நாயகன் பாத்திரத்தில் இயக்குனர் பாலாஜி சக்திவேலும் ஊர்வசி அர்ச்சனாவும் இந்த படத்தில் நடித்திருக்கிறார்கள். மற்றும் இந்த படத்தில் பலர் நடித்திருக்கிறார். விவேக் மெர்வின் இசையில் செரிப் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம் காந்தி கண்ணாடி .

பாலாஜி சக்திவேல் அர்ச்சனா இவர்கள் இருவரும் இளமைதில் காதலிக்கிறார்கள் பாலாஜி சக்திவேல் ஜமீன் குடும்பத்தை சேர்ந்தவர் ஆனால் ஊர்வசி சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த ஒரு ஏழ்மையான பெண்.

இதனால் இவர்கள் காதலுக்கு அந்த ஊரில் மிகப் பெரிய எதிர்ப்பு இருக்கிறது இதனால் இருவரும் கோயம்புத்தூரில் இருந்து சென்னை வந்து திருமணம் செய்து கொண்டு வாழ்கிறார்கள். சமுதாயத்தில் ஒரு மிக உதாரணமாக தம்பதியனரா வாழ்ந்து வருகிறார்கள் ஆனால் இவர்களுக்கு குழந்தைகள் இல்லை பாலாஜி சக்திவேல் செக்யூரிட்டியாகவும் ஊர்வசி அவர்கள் வீட்டு வேலை செய்வார்கள் ஒரு ஏழ்மையான குடும்பத்தில் தான் இருவரும் வருகிறார்கள். ஒரு அறுபதாவது கல்யாணம் போகும் போது அர்ச்சனா நமக்கும் பிள்ளைகள் இருந்திருந்தால் நமக்கும் இப்படி அறுபதாம் கல்யாணம் நடந்திருக்கும் என்று சொல்ல உடனே தன் மனைவியின் ஆசைய நிறைவேற்ற பாலா நடத்தும் ஈவ்ட் கம்பெனிக்கு செல்கிறார். இவர்களுக்கு அறுபதாம் கல்யாணம் செய்ய பாலா 50 லட்சம் ஆகும் என்கிறார். ஆனால் பாலாஜி சக்திவேல் இடம் அவ்வளவு பெரிய தொகை இல்லை. இருந்தும் இந்த திருமணத்தை நடத்தியே ஆக வேண்டும் தன் மனைவியின் ஆசையை நிறைவேற்றி ஆக வேண்டும் என்ற நோக்கத்தோடு பயணிக்கிறார். பணம் எப்படி புரட்டுகிறார். திருமணம் நடந்ததா இல்லையா என்பதுதான் மீதி கதை.

 

ஒவ்வொருவரின் புரிதல் தான் அவர்களின் வாழ்க்கை சரியான முறையில் அமையும் என்பதை மிகவும் அழுத்தமாக ஆழமாக உணர்வு பூர்வமாக சொல்லி இருக்கும் படம் தான் காந்தி கண்ணாடி காதல் ஒரு அழகிய கண்ணாடி அதை இன்றைய காலத்தில் பல சரியாக பயன்படுத்தாமல் வாழ்க்கையில் தவற விடுகிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு இந்த படம் ஒரு பாடம் என்று கூட சொல்லலாம். பணம் பணம் என்று ஓடும் மனிதர்களிடம் குடும்ப பங்களிப்பு என்பது முற்றிலும் இல்லாமல் போய்விட்டது அப்படி இருந்தால் வாழ்க்கை எப்படி முடியும் என்பதையும் இந்த படம் உணர்த்துகிறது.

 

பாலாஜி சக்திவேல் மற்றும் அர்ச்சனா இந்த இருவர் மட்டும் தான் இந்த படத்தை தாங்கி நிற்கிறார்கள். இவர்கள் நடிப்பு கதாபாத்திரம் திரையில் பார்க்கும்போது இவர்களைப் போல நாமும் வாழ வேண்டும் என்ற எண்ணம் ஒவ்வொரு தம்பதியினருக்கும் ஏற்படும். இவர்களுக்குள் இருக்கும் பரஸ்பரம் ஒரு உண்மை தம்பதிக்கான உணர்வுபூர்வமான நடிப்பை இருவரும் வெளிப்படுத்தி நம்மை பிரமிக்க வைக்கிறார்கள். நிச்சயம் இந்த இருவருக்கும் தேசிய விருது உறுதி.

 

நாயகனாக அறிமுகமாகும் பாலா அவர் உண்மையான கதாபாத்திரத்தில் இருந்து இதில் மாறுபட்டு ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பொதுவாக பாலா உண்மை வாழ்க்கையில் தான் சம்பாதிக்கும் பணத்தை ஏழை எளிய மக்களுக்கு 90% கொடுப்பவர் ஆனால் இந்த படத்தில் பாலா பணம் மட்டுமே முக்கியம் என்று வாழ்கிறார் அதற்கு காரணம் அவரின் பெற்றோர்கள். பாலாஜி சக்திவேல் ஊர்வசியின் வாழ்க்கை முறையைப் பார்த்து பாசம் காதல் இதுதான் வாழ்க்கை முக்கியம் என்று உணரும் கட்டத்தில் பாலாவின் நடிப்பு மிக அற்புதமாக வெளிப்படுத்தி இருக்கிறார். முதல் படத்தில் பாலா தான் ஒரு சிறந்த நடிகர் என்பதை குறிப்பாக ஒரு நல்ல கதாநாயகன் என்பதையும் இந்த படம் மூலம் எல்லா விதத்திலும் நிரூபித்தி இருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். நிச்சயமாக தமிழ் சினிமாவில் ஒரு நல்ல நாயகனாக வளம் வர அதிக வாய்ப்பு உள்ளது.

 

நமிதா கிருஷ்ணமூர்த்தி அறிமுக நாயகி பாலாவுடன் நடிக்க முழு மனதுடன் சம்மதித்து தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை முழுமையாக ஏற்று சிறப்பான நடிப்பு மூலம் நம்மை கவர்ந்திருக்கிறார். குறிப்பாக பாலாவிடம் தன் காதலுக்காக சண்டை போடும் காட்சியில் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

 

படத்தில் நடித்த மற்ற ஒவ்வொருவரும் சிறப்பான நடிப்பின் மூலம் படத்திற்கு மிகப்பெரிய பலத்தை சேர்த்திருக்கிறார்கள்.

 

விவேக் மேர்வின் இசையில் பாடல்களும் சரி பின்னணி செய்யும் சரி மிக அற்புதமாக ரசிகர்களுக்கு விருந்து கொடுத்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்.

 

காந்தி கண்ணாடி படத்தை ஒட்டுமொத்தமாக தாங்கி நிற்பவர் இயக்குனர் ஷெரிப். இப்படி ஒரு திறமையான இயக்குனரை இதுவரை ஏன் தமிழ் சினிமா அவரை கவனிக்கவில்லை என்று தான் இந்த படத்தின் மூலம் கேள்வி எழுப்புகிறது. ஒரு உணர்வுபூர்வமான ஒரு கதையை அற்புதமான திரைக்கதை மூலம் நமக்கு விருந்து கொடுத்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். படத்தின் கதை ஒரு பக்கம் பலம் என்றால் படத்தின் திரைக்கதை படத்திற்கு உயிரோட்டம் என்று தான் சொல்ல வேண்டும். ஒவ்வொரு காட்சிகளையும் வசனங்களையும் செதுக்கியிருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும் அவ்வளவு ஒரு சிறப்பான ஒரு உணர்வுபூர்வமான உணர்ச்சிகரமான ஆழமான அழுத்தமான ஒரு கதையை நமக்கு பரிசு கொடுத்து இருக்கிறார். இயக்குனர் செரிப்பை நாம் கொண்டாட வேண்டும்.

 

மொத்தத்தில் காந்தி கண்ணாடி உயிரோட்டம்