
திரையுலகில் ஹீரோவாக சாதிப்பதற்கு உயரம் ஒரு தடையல்ல என்று நிரூபித்து காட்டியவர் தான் பிரபல நடிகர் பாண்டியராஜன். இவர் நடிகர் மட்டுமல்ல இயக்குனரும் கூட என்பது கூடுதல் தகவல்.
இயக்குனர் பாக்கியராஜிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வந்த பாண்டியராஜன் கன்னி ராசி என்ற படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். பத்துக்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ள இவர் ஹீரோவாகவும் பல படங்களில் நடித்துள்ளார்.
இவர்களில் பிரித்விராஜன் மட்டும் சினிமாவில் நடித்து வருகிறார். இறுதியாக கூட ப்ளூ ஸ்டார் என்ற படத்தில் நடித்திருந்தார். தற்போது இவர்களின் குடும்ப புகைப்படம் வைரலாகி வருகிறது.
பாண்டியாரஜன் அவரின் மூன்று மகன்கள், மருமகள்கள் மற்றும் பேரக்குழந்தைகளுடன் ஒரே வீட்டில் ஒன்றாக கூட்டு குடும்பமாக வாழ்ந்து வருகிறார். இது பலருக்கும் பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
