Thursday, April 16
Shadow

குடும்பத்துடன் பொற்கோவிலுக்கு சென்ற நடிகை ரம்யா பாண்டியன்…

பிரபல நடிகை ரம்யா பாண்டியன் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி கிட்டத்தட்ட 9 ஆண்டுகள் ஆகிவிட்டன. இருப்பினும் இவர் 6 படங்களில் மட்டுமே நடித்துள்ளார்.

 

அதிலும் இவர் நடிப்பில் வெளியான ஜோக்கர் படம் மட்டுமே இவருக்கு ஓரளவிற்கு நல்ல பெயரை பெற்று தந்தது. தற்போது கைவசம் இடும்பன்காரி என்ற ஒரே ஒரு படம் மட்டுமே உள்ளது.

 

இதுதவிர முன்னதாக ரம்யா பாண்டியன் குக் வித் கோமாளி, பிக்பாஸ், பிக்பாஸ் அல்டிமேட் போன்ற ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்றார். அதுமட்டுமல்ல கவர்ச்சி புகைப்படங்களையும் அள்ளி தெளித்தார்.

 

ஆனால் ஏனோ இவருக்கு பெரியளவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இருப்பினும் அதை பற்றியெல்லாம் கவலைப்படாமல் ஆன்மிக சுற்றுலா சென்று வருகிறார்.

 

அந்த வகையில் தற்போது ரம்யா பாண்டியன் தனது குடும்பத்துடன் அமிர்தசரஸில் உள்ள பொற்கோவிலுக்கு சென்றுள்ளார். இந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன.