Thursday, April 16
Shadow

நடிகை சங்கீதா பாடகர் கிரிஷ் ஜோடியின் திருமண புகைப்படங்கள்..!!!

மலையாள படங்களில் அறிமுகமான நடிகை சங்கீதா தமிழில் 1998 ஆம் ஆண்டு நெப்போலியன் நடிப்பில் வெளியான பகவத் சிங் படம் மூலம் அறிமுகமானார். அதனை தொடர்ந்து பல படங்களில் நடித்த இவர் பிதாமகன் படத்தில் நடித்து கவனம் ஈர்த்தார்.

 

சங்கீதாவின் கணவர் கிரிஷ் வேட்டையாடு விளையாடு படம் மூலம் தமிழில் சினிமாவில் பாடகராக அறிமுகமானார். இதுதவிர சில படங்களில் சின்ன சின்ன ரோலில் தலைகாட்டியுள்ளார்.

 

இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில் திடீரென ரகசியமாக திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.

 

இந்த தம்பதிகளுக்கு மூன்று ஆண்டுகள் கழித்து பெண் குழந்தை பிறந்தது. ஷிவியா என்ற அந்த பெண் குழந்தை தற்போது நன்றாகவே வளர்ந்து விட்டார்.

 

இப்போது சங்கீதா பட வாய்ப்புகள் இல்லாததால் சின்னத்திரை பக்கம் சென்று விட்டார். அதன்படி ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் நடன நிகழ்ச்சி ஒன்றில் நடுவராக இருந்து வருகிறார்.

 

இந்நிலையில் நடிகை சங்கீதா மற்றும் பாடகர் கிரிஷ் திருமண புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன. அவற்றை பார்க்கும் ரசிகர்கள் இருவரும் க்யூட்டாக இருப்பதாக கூறி வருகிறார்கள்.