
டூரிஸ்ட் ஃபேமிலி படம் எப்படி இருக்கு.. முதல் திரை விமர்சனம் இதோ!
அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் சசிகுமார், சிம்ரன், யோகி பாபு, எம்.எஸ்.பாஸ்கர் நடிப்பில் உருவாகியுள்ள டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் திரை விமர்சனம் இதோ.
அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் சசிகுமார், சிம்ரன், யோகி பாபு, ரமேஷ் திலக், கமலேஷ், எம்.எஸ்.பாஸ்கர், பக்ஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி நாளை (மே 1) திரைக்கு வரவிருக்கும் படம் டூரிஸ்ட் ஃபேமிலி. பத்திரிக்கையாளர்களுக்கு முன்னரே இப்படத்தின் சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. இந்த நிலையில் இப்படத்தின் திரை விமர்சனம் குறித்து பார்ப்போம்.
என்ன கதை?
இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறும் சசிகுமாரின் குடும்பம், ராமேஸ்வரம் வழியாக சென்னைக்குள் நுழைகின்றனர். இங்கு சிங்கள அடையாளத்தை மறைத்து வாழ்ந்து வருகின்றனர். அப்போது எதிர்பாரா விதமாக ஒரு குண்டு வெடிப்பு சம்பவத்தில் இவர்களை தீவிரவாதிகளாக சித்தரிக்க முயல்கின்றனர். அதிலிருந்து சசிகுமார் குடும்பம் எப்படி மீண்டது என்பதுதான் இப்படத்தின் மையக்கரு.
எப்படி இருக்கு?
ரொம்பவே சீரியஸான இந்த கதையை காட்சிக்கு காட்சி சிரிக்கும் வகையில் சொல்லி அசத்தியிருக்கிறார் அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த். பழைய ராதா மோகன் படத்தை பார்ப்பது போன்ற உணர்வை நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்த படம் கடத்தியிருக்கிறது.