
தணல் இந்த படத்தோட கதை என்னன்னா.. சென்னையில பேங்க்ல கொள்ளையடிச்ச கும்பல போலீஸ் சுட்டுக் கொலை செய்யுது.. அந்த போலீஸ் குழுவ அஸ்வின் தலைமையிலான வில்லன் கும்பல் கொலை செஞ்சுடுறாங்க.. இந்த சம்பவம் நடந்து சரியாக இரண்டு வருடங்கள் கழித்து, அதர்வா மற்றும் அவரு கூட சேர்ந்து 5 பேர் போலீஸ் கான்ஸ்டபிளாக வேலையில சேர ஸ்டேஷனுக்கு போறாங்க… ஆனா ஆர்டர் கிடைக்க லேட் ஆகுங்கறதால அன்னைக்கு நைட் ரவுண்ட்ஸ் போறாங்க.. அப்போ தணல்குள்ள இருந்து ஒருத்தன் சந்தேகப்படுற மாதிரி வெளியே வர்றான்.. அவனை துறத்திட்டு எல்லோரும் போக, ஒரு குடிசை பகுதிக்குள்ள மாட்டிக்குறாங்க.. அங்க அந்த வில்லன் கும்பல் சிட்டில பல இடங்கள்ல பேங்க்ல கொள்ளையடிக்க திட்டம் போட்டுட்டு இருக்காங்க.. இதனை கண்டுபிடிக்குற ஹீரோ அவங்க திட்டத்தை முறியடிச்சாரா? யார் அந்த கும்பல்? இறுதியில என்ன நடந்துச்சு இதுதான் படம்..
படம் தொடங்கி ஒரு 20 நிமிடம் ஹீரோ அறிமுகம் , அவரோட காதல் அப்படின்னு போகுது. அதுக்கு அப்புறமா ஆறு கான்ஸ்டபிள்கள் சேர்ந்து அந்த குடிசைப் பகுதியில மாட்டிக்கிட்டதும் படம் சூடு பிடிக்குது..அங்கிருந்து பரபரன்னு கதை நகருது.. அதர்வாக்கு டிஎன்ஏ படத்துக்கு அப்புறமா மற்றுமொரு நல்ல படம் வந்திருக்கு.. ஆக்ஷன், காதல், கோபம் என அத்தனை உணர்வுகளையுமே அழகா வெளிப்படுத்தியிருக்காரு.. தொடர்ந்து இதுபோன்ற படங்கள்ல நடிச்சார்னா அவருக்கு நல்லது..
அஸ்வின் வில்லனா இருந்தாலுமே படத்துல இன்னொரு ஹீரோ மாதிரி சூப்பரான நடிப்ப கொடுத்திருக்காரு.. அவர் சொல்ற காரணம் சற்று ஏற்றுக்கொள்ள முடியாத படி இருந்தாலும் நடிப்புல குறையில்லை..
இதுபோன்ற படங்கள்ல ஹீரோயினுக்கு என்ன வேலை இருக்குமோ அதேதான் இதுலயும் நாயகி லாவண்யாவுக்கு..
கான்ஸ்டபிள் நண்பர்களாக வர்ற பரணி, ஷா உள்ளிட்ட எல்லோருமே நல்ல நடிப்ப கொடுத்திருக்காங்க..
படத்துக்கு தன் முழு உழைப்பையும் கொடுத்து வேலை செஞ்சிருக்காரு ஒளிப்பதிவாளர்.. ஜஸ்டின் பிரபாகரனோட பின்னணி இசை படத்துக்கு ஆகச் சிறந்த பலமா இருக்கு.. போலி என் கவுண்டர் சம்பவத்தை அடிப்படையாக வெச்சு இந்த படத்த எடுத்திருக்காரு இயக்குனர் ரவீந்திர மாதவா.. பரபரப்பான திரைக்கதை படத்துக்கு பலமா இருக்கு.. மொத்தத்துல தணல் படத்த நிச்சயம் ஒரு முறை பார்க்கலாம்..
